இந்த வயசுலயும் தொட்டில் ஆசை..! இப்டி கூட இருக்கா..? வைரலாகும் விஜய் டிவி பிரபலம் வீடியோ...
பெரிய திரை நடிகைகளுக்கு எந்த அளவுகக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுக்கும் மேல் தனக்கு என ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை பவித்ராலட்சுமி. விஜய் டிவி யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். இவருடான நடிகர் புகழின் கோம்போ மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.
இவர் நிறைய விளம்பர படங்களிலும் பணியாற்றி வருகிறார். நடிகர் சதீஷுடன் நாய் சேகர் படத்தில் ஜோடியாக நடித்தார். அடுத்து கைவசம் படங்கள் வைத்துள்ளார். மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் உங்களுக்காக — >
சண்ட வரும்னு பாத்தா இப்டி மாறிட்டாங்களே..? வைரலாகும் புகைப்படம்
இதையடுத்து பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிர் உடன் ஒரு ரோமாண்ட்டிக் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடிப்படையில் டான்ஸரான பவித்ரா லட்சுமி ஏற்கெனவே மலையாள சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேலும் பிரபலமானார்.
இதற்கிடையில் தனது உடம்பையும் கன்ட்ரோலாக வைத்திருப்பதிலும் கவனமாக இருப்பார். யோகா, உடற்பயிற்சி செய்வதில் வழக்கமாக இருப்பார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் தொட்டிலில் புது விதமான யோகா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க: https://www.instagram.com/reel/CaT8bSqp3Y7/?utm_source=ig_web_copy_link