பாறை மீது பப்பரப்பான்னு போஸ் கொடுத்த பவித்ரா லட்சுமி!.. புதுசா ஏதும் பட வாய்ப்பே கிடைக்கலையாம்மா!..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுசாக வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை பறித்து வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி. அந்த படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு சுமார் ஐந்து ஆண்டுகள் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: வயசானாலும் சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஜூம் பண்ணி ரசிக்க வைக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா…

அமேசான் பிரைமில் வெளியான டைம் என்ன பாஸ் எனும் ஓடிடி தொடரில் ஒரு சின்ன வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி நான்காவது ரன்னர் அப்பாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த காமெடி நடிகர் சதீஷ் தான் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பவித்ரா லட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்தார். அடுத்ததாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தாவுக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் நடிக்க சதீஷ் தான் வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு எக்கோ வச்ச பெரிய ஆப்பு!.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!..

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு பிறகு மலையாளத்தில் உல்லாசம், அதிரிஷ்யம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் யூகி மற்றும் ஜிகிரி தோஸ்த் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு ஷாரிக் நடிப்பில் வெளியான ஜிகிரி தோஸ்த் படத்துக்கு பிறகு சுமார் ஒரு வருஷமாக எந்த ஒரு புது படங்களிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பரத்தின் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு புதிய வாய்ப்புகளை பவித்ரா லட்சுமி தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது பாறை மீது அமர்ந்து கொண்டு பக்காவாக தனது பளிச்சிடும் அழகு தெரிவது போல போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி படம் மரண மாஸா?.. அய்யோ முடியல பாஸா?.. மகாராஜா விமர்சனம் இதோ!..

 

Related Articles

Next Story