யோ உனக்கு வேற வேலையே இல்லையா? நல்ல கதையெல்லாம் இப்படி பண்ணி வச்சிருக்க.?!
தெலுங்கு சினிமாவில் ஓர் பழக்கம் உண்டு. அது தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஆனால், சில நடிகர்கள் அதனை அப்படி விடுவதாயில்லை போலும். அதாவது தெலுங்கு சினிமாவில் ஓர் மாஸ் ஹீரோ திரைப்படம் என்றால் வில்லனுக்கு வேலையே ஹீரோவிடம் அடி வாங்குவது தான். வில்லனுக்கு பெரிய வேலை ஏதும் இருக்காது.
அதனை தவிர்த்து தமிழ், மலையாளம் சினிமா போல தற்போது தான் சக நடிகருக்கும் சக உரிமை கொடுத்து சில படங்கள் உருவாகி வருகிறது பாகுபலி, RRR இன்னும் சில படங்கள் போல. ஆனால், பவன் கல்யாண் நல்ல கதைகளை கூட ரீமேக் என கூறி அவருக்கேற்ற மாஸ் கமர்சியல் அம்சங்களை சேர்த்து அதனை பக்கா கமர்சியல் படங்களாக உருமாற்றி கமர்சியல் வெற்றியை பெற்று விடுகிறார்.
ஏற்கனவே, பிங்க் படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கில் பெற்று அதனை பக்கா கமர்சியல் படமாக மாற்றிவிட்டார். இன்ட்ரோ சண்டை காட்சி, இன்ட்ரோ பாட்டு , வில்லன்களுடன் மோதுவது என நல்ல கதையம்சத்தை கமர்சியல் படமாக்கிவிட்டார். தமிழில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் பிங்க் படத்தின் சாயல் கெடாமல் நல்லவேளை அஜித் - வினோத் கூட்டணி படமாக்கிவிட்டது.
இதையும் படியுங்களேன் - ஷூட்டிங் தான் போறீங்களா? ஊரசுத்தி பாக்க போறீங்களா.?! நெல்சன் என்ன செய்துள்ளார் தெரியுமா.?!
அதே போல அண்மையில் வெளியான பீம்லா நாயக் திரைப்படமானது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் ஆகும். அப்படம் இரு ஹீரோ படம். இரு ஹீரோவும் அவர்கள் பார்வையில் நல்லவர்கள். ஆனால், அதனை ஹீரோ வில்லன் கதையாக மாற்றி, உடன் நடித்த ராணாவை வில்லனாக மாற்றிவிட்டார் பவன் கல்யாண்.
சரி இதுவரை போனது போகட்டும் என பார்த்தல், தற்போது தமிழில் விஜய் சேதுபதி - மாதவன் நடித்து எப்போதும் பேசப்படகூடிய இரு ஹீரோ படமாக இருக்கும் விக்ரம் வேதாவை பவன் கல்யாண் ரீமேக் செய்ய உள்ளாராம். இதையும் ஹீரோ வில்லன் கதாபாத்திரம் போல சித்தரித்து கதையை மாற்ற உள்ளனராம்.
இதனையெல்லாம் கண்ட சினிமா ரசிகர்கள் கொஞ்சம் நல்ல படங்களை பவன் கல்யாண் கண்ணில் படமால் பார்த்துக்கொள்ளுங்கள் என இணையத்தில் கெஞ்சி வருகின்றனர்.