பந்தா பரமசிவம் போல ஏகப்பட்ட டாட்டா சுமோவில் ஆட்களை கூட்டிக் கொண்டு டாப் ஃப்ளோரில் அமர்ந்து கொண்டு பவன் கல்யாண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தலுக்காக போட்ட சீன் இருக்கே, அடேங்கப்பா தியேட்டரில் முதல் நாள் படத்தை பார்க்க முந்திக் கொண்டு வரும் கூட்டமும் யூடியூபில் டீசர், டிரெய்லர் வெளியானால் வியூஸை எகிற வைக்கும் கூட்டமும் நமக்குத் தான் ஓட்டுப் போடுவாங்க என நம்பிய பவன் கல்யாணுக்கு சொந்த ரசிகர்களே முதுகில் குத்திட்டாங்க என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
எல்லாருமே எம்ஜிஆராகவோ என்டிஆராகவோ ஆக முடியுமா பாஸ் என்பது போல சினிமா நடிகர்கள் தொடர்ந்து அரசியலில் அடி வாங்கி வருவது காட்டுகிறது. கமல்ஹாசனுக்கு எப்படி கோவை மக்கள் தோல்வியை கொடுத்தார்களோ அதே போலத்தான் தெலங்கானாவில் சிரஞ்சீவி, ராம்சரண், பவன் கல்யாண் ரசிகர்கள் கூட ஓட்டுப் போடாமல் போட்டியிட்ட 8 இடங்களிலும் ஜனசேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
இதையும் படிங்க: இப்பதான் கபாலி, விக்ரம்!.. 70 வருடங்களுக்கு முன்பே படத்தை வேற லெவலில் விளம்பரம் செய்த ஏவிஎம்!..
அப்படியே அந்த தோல்வியை நம்ம விஜிம்மா பக்கம் நெட்டிசன்கள் திருப்பி கம்பேர் செய்து பார்க்கின்றனர். இதற்கு பயந்துட்டுத்தான் ரஜினியே உஷாரா ஒதுங்கிட்டாரு. ஆனால், பெருசா எய்ம் வைக்கணும், கப்பு முக்கியம் பிகிலு என லியோ வெற்றி விழாவில் பில்டப் பண்ண விஜய்யோட அரசியல் வாழ்க்கை மற்றும் அந்த சி.எம். கனவு அவர் தேர்தலை சந்தித்தால் இதே போலத்தான் பலத்த அடி விழுமா? என்கிற கேள்வியை விட அடிதான் விழும் என்றே பலரும் எச்சரித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கும் இந்த விஷயம் எல்லாம் ரிப்போர்ட்டாக சென்றுள்ள நிலையில், முன் வைத்த காலை பின் வைக்க போகிறாரா அல்லது தொடர்ந்து புதிய படங்கள் வரும் போதெல்லாம் ரஜினி மாதிரியே பேசி ஏமாற்றுவாரா? என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கவுண்டமணியின் வெற்றிக்கு பின்னால் இருந்த அந்த நடிகர்!.. அவர் மட்டும் இல்லன்னா!…
Sivakarthikeyan: விஜய்…
ஐயப்பனை கொச்சைப்படுத்தும்…
நடிகர் சூர்யாவை…
பைரவி படத்தின்…
அமரன் திரைப்படம்…