ஜெயில் படம் தாக்கத்தை ஏற்படுத்தும் - ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் வாழ்த்து

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் அபர்நதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். வட சென்னையில் வசிக்கும் ஒரு வாலிபனின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது. வசந்தபாலன் ஏற்கனவே வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கியிருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இசை அமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக மாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தாம் ஜெயில். இந்த திரைப்பம் உலகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை சமீபத்தில் இயக்குனர்கள் பலரும் பார்த்தனர். படம் பார்த்த அனைவருமே இப்படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

jail

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘ வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் முதல் அங்காடித் தெரு வரை அனைத்து படங்களும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள். ஜெயில் திரைப்படமும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்’ என பதிவிட்டுள்ளார். அதோடு, படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

twit

ஜெயில் திரைப்படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை எம் எஸ் எம் பிலிம் ட்ரேடர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it