Connect with us

ராம் சரணின் பெத்தி பட ரை ரை ரா ரா பாடல் படைத்த இமாலய சாதனை!

Ram Charan Peddi

latest news

ராம் சரணின் பெத்தி பட ரை ரை ரா ரா பாடல் படைத்த இமாலய சாதனை!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படம் பெத்தி. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘ரை ரை ரா ரா’ தென்னிந்திய திரையுலகின் முந்தைய சாதனைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியுள்ளது.

ஒரே நாளில் 46.1 மில்லியன் பார்வைகள்!

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியாகி வைரலான நிலையில், நேற்று வெளியான ‘ரை ரை ரா ரா’ அறிமுகப் பாடல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐந்து மொழிகளிலும் சேர்த்து இப்படம் 46.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 800K+ லைக்குகளையும் குவித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

குறிப்பாக, தெலுங்கு மொழியில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வைகள் என்ற சாதனையை ‘பெத்தி’ படமே மீண்டும் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்கு மின்னல் போன்ற அதிரடியான இசையை வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த பீட்ஸ் மற்றும் ரஹ்மானின் தனித்துவமான குரல் பாடலின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது. தமிழில் பாடலாசிரியர் விவேக் மற்றும் தெலுங்கில் அனந்த ஸ்ரீராம் எழுதிய வரிகள் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. வெறும் நடனம் மட்டுமல்லாது, தனது உடல் மொழி மற்றும் ‘ஸ்டைல்’ மூலம் திரையை ஆளும் தனித்துவம் மிக்கவர் ராம் சரண். இந்தப் பாடலில் ஜானி மாஸ்டர் வடிவமைத்த மிகக் கடினமான நடன அசைவுகளை, மிகுந்த லாவகத்துடனும் வேகத்துடனும் ஆடி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்கும் இப்படம் ஏப்ரல் 30 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Continue Reading
You may also like...
To Top