Connect with us
banner

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல…இது பஞ்ச் டயலாக் அல்ல…திகில் படங்கள் தான்…!

Cinema History

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல…இது பஞ்ச் டயலாக் அல்ல…திகில் படங்கள் தான்…!

தமிழில் வெளியான பேய் படங்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு சில ஒற்றுமைகளைக் காண முடியும். உதாரணமாக அவை பெரும்பாலும் பேய் வசிக்கும் இடங்களாகத் தான் இருக்கும். அப்போது தான் நாம் டைட்டில்லேயே ஒரு வித த்ரில்லான அனுபவத்தை உணர முடியும்.

இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்க போல அப்படி இருக்கு அல்லவா? அதானே…நாமும் உட்கார்ந்து யோசித்தால் இது போன்ற சுவாரஸ்யமான பேய் படங்களைப் பார்த்து திரில்லான அனுபவத்தை உணரலாம். பார்க்கலாமா..!

டிமான்டி காலனி

2015ல் வெளியான இது வித்தியாசமான பேய் படம். படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்று யூகிக்க முடியாத அளவு திகில் காட்சிகள் சஸ்பென்சாக அமைந்திருக்கும். இதுதான் இந்தப்படத்தின் பிளஸ் பாயிண்ட்.

demonty colony

இந்த வித்தியாசமான கதைக்களத்தை திகில் படம் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த ரசனையுடன் பார்த்து மெய்சிலிர்த்தனர். அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

13ம் நம்பர் வீடு

1990ல் வெளியான இந்தப்படத்தை பேபி இயக்கியுள்ளார். ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, ஸ்ரீபிரியா, சாதனா உள்பட பலர் நடித்துள்ளனர். அந்தக்கால கட்டத்தில் இந்தப்படத்தின் போஸ்டர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் படுபயங்கர திகில் படம் என்று வாசகம் போடுவார்கள். உண்மையிலேயே படம் அப்படித் தான் இருந்தது.

பேய் வீடு

1984ல் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியானது. கார்த்திக், அம்பிகாவின் நடிப்பில் பயங்கர திகில் படமாக உருவானது. சங்கர் கணேஷின் இசை திகிலுக்கு மேலும் வலு சேர்த்தது.

அரண்மனை

2014ல் வெளியான படம். சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான பயங்கர பேய் படம் இது. வினய், லட்சுமிராய், ஹன்சிகா, சந்தானம், ஆண்ட்ரியா, கோவைசரளா, மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் 3 பாகம் வந்து விட்டது. ஆனால் முதல் பாகம் தான் செம திகில். ஆண்ட்ரியா தான் ஆட்டம் போடும் பேயாக வந்து கலக்குகிறார்.

மோகினி வீடு

mohini veedu

ரவி பசேரா இயக்கத்தில் அனில் தவான், பெயின்டல், மேக்னா பட்டேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் 2013ல் வெளியானது. படுபயங்கர திகில் படமாக இருந்த போதும் மேக்னா பட்டேலின் கவர்ச்சி கண்களுக்கு குளிர்ச்சியைத் தந்தது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top