இவ்வளவு பட்டும் நீங்க திருந்தலையா? அஷ்வின் செய்த வேலையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அஷ்வின். சினிமாவில் சாதிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது. ஆணவம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அஷ்வினோ ஒரே ஒரு படத்தில் ஹீரோவா நடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் செய்து வந்தார்.
அதன்படி அவர் ஹீரோவாக நடித்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் கொஞ்சம் திமிராகவே பேசியதால் நெட்டிசன்களால் பயங்கரமாக டிரோல் செய்யப்பட்டார். இதனால் அவரின் படம் வெளியாவதில் கூட சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் வெளியான அந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அஸ்வின் பேசிய பேச்சுதான் இதற்கு காரணம் என கூறிய படக்குழுவினர் அஷ்வினிடம் தான் பேசியது தவறு என்பதுபோல் மக்களிடையே மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிடுமாறு கேட்டுள்ளது.
ஆனால் அதை மறுத்த அஷ்வின் என்னால் அப்படியெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியதோடு சமீபத்தில் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றால் மேலும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதன்படி அந்த பதிவில் அஷ்வின் கூறியிருப்பதாவது, "பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும்" என கூறியுள்ளார்.
ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த பதிவு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதை போல் ஆகிவிட்டது. இப்போதுதான் ஒரு படம் நடித்து தனது கெரியரை தொடங்கி உள்ள அஷ்வின் இதுபோன்ற தொடர் திமிர் பேச்சால் அதை குளோஸ் செய்து விடுவார் போல தெரிகிறது.