எம்ஜிஆர் சொன்னதையே கேட்கல.. விஜய் சொன்னா மக்கள் கேட்பாங்களா? நடக்காது
சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தன்னுடைய உயரத்தை அடைந்ததும் அதை தக்க வைத்து கொள்ளாமல் அரசியலிலும் ஏதாவது பண்ண வேண்டும் என வந்து விடுகின்றனர். அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை உச்சம் தொட்ட நடிகர்களின் ஆசையாக இருப்பது அரசியல் தான்.
இவர்கள் வரிசையில் இப்போது விஜயும் வந்து விட்டார். தவெக என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் செயல்பாடுகளை கொண்டு செலுத்தி வருகிறார். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அதுதான் அவருடைய கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோட். பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.அதோடு துப்பாக்கியை புடிங்க சிவானு விஜய் சொன்னது இன்று வரை பேசு பொருளாக மாறியுள்ளது.
இது விஜய் தன்னுடைய அடுத்த கலை வாரிசாக சிவகார்த்திகேயனை அறிவித்து விட்டாரா என தயாரிப்பாளர் பாலாஜியிடம் கேட்ட போது அது நடக்காது என கூறினார். ஏனெனில் அப்பேற்பட்ட பெரிய ஆளுமையாக இருந்த எம்ஜிஆரே அவருடைய அடுத்த கலை வாரிசாக பாக்யராஜை கூறி கடைசியில் என்னாச்சு? பாக்யராஜும் கட்சி ஆரம்பித்தார்.ஆனால் வர முடிந்ததா?
எம்ஜிஆர் சொன்னவரையே மக்கள் ஏற்கவில்லை. விஜய் சொன்னால் மட்டும் கேட்பார்களா? சிவகார்த்திகேயன் அவரது சொந்த முயற்சியில் வரட்டும்.இப்போ அமரன் படம் நல்ல வெற்றி படமாக அமைந்தது. அதை போல அவராக வரட்டும் என பாலாஜvijay vijay