பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா செய்யும் வேலைகள்.. ரசிகர்கள் குமுறல்

Published on: October 19, 2021
priyanka
---Advertisement---

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் அமைதியாக இருந்த பிரியங்கா இப்போ மாறிவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொண்டால் பெயர் கெட்டுவிடும் என்று அறிவுரை கலந்து கொள்ள வேண்டாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள் ஆனால் அதையெல்லாம் மீறி இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான புதுமுகங்கள் அறிமுகம் ஆகி உள்ளனர். ஆனால் பிரபலங்கள் அதிகமாக இல்லாத காரணத்தால் மக்களிடம் இதை பார்க்கும் ஆர்வம் மற்ற சீசன்கள் போல் இல்லாமல் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. போட்டி, பொறாமை, கோபம், சண்டை, டீம் போட்டு காலய்ப்பது, ஒருவரை ஒருவர் வெறுப்பேறுவது என எந்த டாஸ்கும் இதுவரை பிக்பாஸ் கொடுக்கவில்லை. முதல் வாரம் முடிவடைந்ததும் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் தற்போது தான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துள்ளது. பிரியங்கா ஜாலியாக பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தாலும் , முதல்முறையாக தன் வேலையை ஆரம்பித்துள்ளார்.

Also Read

priyanka
priyanka

தொகுப்பாளர்களில் டக்கென்று ரசிகர்களின் மனதில் நினைவிற்கு வரும் பிரியங்கா, ஆட்டத்தை தொடங்கி உள்ளதன் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அபிஷேக் செய்யும் செயல்களுக்கு இவர் உடந்தையாக இருக்கிறார் என்பது தான் காரணம். இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு வருகின்றனர். போனவாரம் எலிமினேஷனில் இவர்தான் அதிகமான வாக்குகள் பெற்று முதலிடத்தில் சேவ் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரமும் இவர் நாமினேஷனில் இருக்கும் நிலையில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

Leave a Comment