சச்சினுடன் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம்!.. பின்ன அப்படி நடிக்க சொன்னா நடிப்பீங்களா என்ன?..

by Rohini |   ( Updated:2023-04-09 15:31:58  )
sachin
X

sachin

கிரிக்கெட் உலகில் பெரிய ஜாம்பவனாக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் நிகழ்த்திய சாதனை உலகளாவியது. எத்தனை எத்தனை விருதுகள், எத்தனை எத்தனை சாதனைகள், கோடான கோடி ரசிகர்களை உள்ளடக்கிய இந்தியாவின் ஒரே நாயகன் இவர் தான்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தாலும் அவருக்கு இருக்கும் அந்த மாஸ் இன்னும் அவர் எங்கு போனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது தோனிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறதோ அதை விட பல மடங்கு மரியாதையுடன் வலம் வந்தவர் தான் சச்சின்.

இப்படிப்பட்ட பிரபலத்துடன் ஒரு விளம்பரத்தில் நடிக்க ஒரு சின்னத்திரை பிரபலம் மறுத்திருக்கிறார். அது யாரென்றால் 90’ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளையடித்த பெப்சி உமா தான். பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேர் மனதை கொள்ளையடித்தவர் தான் உமா.

கமல், ரஜினி ஆகியோருக்கு இருக்கும் ரசிகர்களின் கூட்டத்தை விட அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் உமா. அந்தக் காலத்திலேயே ரஜினியுடனும் கமலுடனும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் வந்தும் அதை மறுத்தார் பெப்சி உமா.

மேலும் ஒரு ரசிகர் அவருக்காக கோயிலே கட்டியிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பெரிய பேனர், கட் அவுட்டுகளையும் வைத்து பல அரசியல் பிரமுகர்களை கோபத்திலும் ஆழ்த்தினர். அந்த அளவுக்கு பெப்சி உமாவுக்கு ரசிகர்களின் பலம் இருந்தது.

இந்த நிலையில் சச்சினுடனும் ஒரு விளம்பரத்தில் நடிக்க உமாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அந்த விளம்பரத்தில் கவர்ச்சி உடையணிந்து நடிக்க வேண்டும் என சொன்னார்களாம். ஆனால் உமா மறுத்திருக்கிறார். இருந்தாலும் பெரிய ஆஃபரை கொடுத்தும் நடிக்க அணுகியிருக்கின்றனர். ஆனால் உமா முடியவே முடியாது என சொல்லிவிட்டாராம். இந்த செய்தியை மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : கமல் படமா..பயந்து கொண்டே போன கதாநாயகி – தாவணியை பிடித்து இழுத்த கமல்!

Next Story