Categories: Cinema History Cinema News latest news

ரஜினி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு…மறுத்த பெப்சி உமா…ஆச்சரிய தகவல்

தமிழ் சினிமாவில் வாய்ப்பு வராதா என ஏங்கி இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் கிடைத்த சினிமா வாய்ப்பினை ஒருமுறை அல்ல பல முறை நிராகரித்த பெருமைக்கு சொந்தக்காரர் பெப்சி உமா என்ற டிவி தொகுப்பாளினி என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

சன் டிவியின் துவக்கத்தில் இருந்த சில நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வெற்றியினை பெற்றன. அதில் முக்கியமான நிகழ்ச்சி என்றால் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் தொகுத்து வழங்கியவர் உமா. இவரின் நிகழ்ச்சியில் கடைசியில் அவர் சொல்லும் கீப் ட்ரையிங், கீப் ஆன் ட்ரையிங், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்ற வசனம் இன்னும் பலருக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அதற்கு காரணமே இவரின் அந்த ஸ்டைலிலும், குரலும் தான்.

பெப்சி உமா

இப்படி ஒரு காலத்தில் பலரின் கனவுக்கன்னியாக இருந்த உமாவினை சினிமா உலகம் எப்படி விட்டு வைக்கும். அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. டிவி வாய்ப்புதான் தனது வாழ்க்கை என நம்பிய உமா கிடைத்த சினிமா வாய்ப்பினை திரும்பிக்கூட பார்க்கவில்லையாம். ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் வைத்து உமாவினை பிரபல இந்தி தயாரிப்பாளர் சுபாஷ் காய் சந்தித்தார். ஷாருக்கானினை வைத்து உருவாகவுள்ள படத்தில் உமா நடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவரிடம் தனது மறுப்பை மட்டுமல்லாமல் தனக்கு சினிமா மீது பிரியம் இல்லை என்றே சொல்லி அனுப்பினாராம்.

முத்து

சரி இந்திக்கு தானே இப்படி என்றால் தமிழில் முத்து படத்தில் நாயகியாக நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்ததாம். ஆனால், சினிமாவில் நடிக்கவே முடியாது. அந்த ஆசையும் எனக்கு சுத்தமாக இல்லை எனக் கூறி அதற்கும் தடை போட்டு விட்டாராம். அடடா!

Published by
Akhilan