இரத்தம் பீறிட்டு வருது! அஜித் முடியவே முடியாதுனுட்டாரு.. பெப்சி விஜயன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

Published on: April 11, 2024
vijayan
---Advertisement---

Ajith Pepsi Vijayan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி ஹீரோவாக வலம் வரும் அஜித்தை பற்றி பெப்சி விஜயன் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியிருக்கிறார். தில் படத்தின் மூலம் தான் தமிழில் முதன் முதலாக வில்லனாக நடித்தார் பெப்சி விஜயன். அதன் பிறகு வில்லன் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு பெப்சி விஜயனுக்கு கிடைத்தது.

இருவரும் அந்தளவுக்கு சேர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பெப்சி தொழிலாளர்களுக்காக அஜித் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறாராம். அதன் மூலமாக ஆஃப் ஸ்கீரினில் அஜித்துக்கும் பெப்சி விஜயனுக்கும் இடையே ஒரு ரேப் இருந்து வந்திருக்கிறது. அஜித்தின் வாலி பட ரிலீஸின் போது ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்திருக்கிறது. அதற்கு பெப்சி விஜயன் அஜித்துடன் நின்று அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் படம் ஓவரா!.. அடுத்த படத்தில் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன்!.. இயக்குநர் யாரு தெரியுமா?..

நடிகர்களிலேயே அஜித் மட்டும்தான் ஃபைட் சீன் முடிந்ததும் கீழே விழும் ஸ்டண்ட் கலைஞர்களை கை கொடுத்து தூக்கி விடுவாராம்.ஏனெனில் வலி என்றால் என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருப்பவர் என பெப்சி விஜயன் கூறினார். ஒரு சமயன் வில்லன் பட சூட்டிங்கில் சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் பெப்சி விஜயன் ஈடுபடும் போது கண்ணாடி பெப்சி விஜயனின் நெற்றியில் குத்தி ரத்தம் பீறிட்டு வந்திருக்கிறது.

உடனே பெப்சி விஜயன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அந்த இடத்தில் தையல் போட்டு மீண்டும் நடிக்க வந்தாராம். ஆனால் அஜித் ஐய்யயோ முடியவே முடியாது. இரத்தம் எந்தளவுக்கு வந்திருக்கிறது? அதே வலியுடன் நடிப்பது சாத்தியப்படாது. என்னால் முடியாது என மல்லுக்கட்டினாராம். அந்தளவுக்கு மற்றவர்களின் வலியை தன் வலி போல் நினைப்பவர் அஜித் என பெப்சி விஜயன் கூறினார்.

இதையும் படிங்க: ச்சே!.. கருமம்.. கருமம்!.. நம்ம மைண்ட் அங்க போகுதே!.. ஸ்ரீதேவி மகள் பார்த்த வேலையை பார்த்தீங்களா?..

அதே போல் சமீபத்தில் நடந்த விடாமுயற்சி பட விபத்து குறித்தும் பெப்சி விஜயன் கூறினார். அந்த வீடியோவை பார்க்கும் போது அஜித்தின் கண்களில் ஆரவ்வை எப்படியாவது பத்திரமாக கொண்டு போக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் அஜித். மற்றபடி அவருக்கு பயமே கிடையாது. மிகவும் தில்லான மனிதர் என பெப்சி விஜயன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.