பேரரசு தம்பிக்கு கிடைத்த விஜய் பட வாய்ப்பு… இயக்குனரை பற்றி தவறாக வத்தி வைத்த நண்பர்கள்… ஓஹோ இதுதான் விஷயமா?

Vijay
“திருப்பாச்சி”, “சிவகாசி”, “திருப்பதி” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய பேரரசு 2000களில் மிகப்பெரிய வெற்றி இயக்குனராக திகழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவரது திரைப்படங்கள் சரிவை கண்டன. தான் இயக்கும் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் தென்படுவது பேரரசுவின் வழக்கம். தான் இடம்பெறும் காட்சியில் பல பஞ்ச் வசனங்களை பேசி அதிரவைப்பார் பேரரசு.

Perarasu and Vijay
பேரரசு விஜய்யை வைத்து இயக்கிய “திருப்பாச்சி”, “சிவகாசி” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பேரரசுவின் தம்பியான முத்து வடுகு விஜய்யை வைத்து “முரசு” என்று ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்ததாம். இந்த நிலையில் இத்திரைப்படம் கைக்கூடாமல் போனது குறித்து ஒரு தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது பேரரசு இயக்கிய “திருப்பாச்சி”, “சிவகாசி” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து பேரரசுவின் தம்பியும் உதவி இயக்குனருமான முத்து வடுகுவுக்கு விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்ததாம். அதன் படி அவர் விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னாராம். விஜய்க்கும் அந்த கதை பிடித்துப்போக அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டும் உள்ளார். அந்த திரைப்படத்திற்கு “முரசு” என்று பெயர் வைக்கப்பட்டு அத்திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளும் மும்முரமாக தொடங்கியது.

Muthu Vadugu
ஆனால் விஜய்க்கு மிக நெருக்கமானவர்களும் பேரரசுக்கு வேண்டப்படாத ஆட்கள் சிலரும் விஜய்யிடம் “ஏற்கனவே பேரரசுவோட சேர்ந்து ரெண்டு படம். இப்போ அவருடைய சகோதரரோட ஒரு படம். பேரரசு குடும்பம் இல்லைன்னா விஜய்யே இல்லைன்னு இப்போ வெளியில பேசிக்கிறாங்க” என்று கொளுத்திப்போட்டார்களாம்.

Vijay
மேலும் சிலர் “தொடர்ந்து அவுங்க குடும்பத்துக்கே படம் பண்ணனுமா? கொஞ்சம் இடைவெளி விட்டுப் பண்ணுங்க” என்றும் கூறினார்களாம். ஆதலால் விஜய்யின் மனதும் மாறியதாம். அதன் பின் “முரசு” திரைப்படத்தின் பணிகள் தள்ளிப்போய் ஒரு கட்டத்தில் அத்திரைப்படத்தின் பணிகள் அப்படியே நின்றுபோனதாக சித்ரா லட்சுமணன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் கேரியருக்கு ஆப்பு வைக்க நினைத்த பிரபல சினிமா குடும்பம்… இவங்களா இப்படி பண்ணது?