Categories: Cinema History Cinema News latest news

அறிஞர் அண்ணா பெண் பெயரை பயன்படுத்தி எழுதிய கதை… ஜெமினி ஸ்டூடியோ அதிபர் செய்த அபூர்வ செயல்…

பேரறிஞர் அண்ணா என்று புகழப்படும் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வராகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்தாபகராகவும் திகழ்ந்தவர் என்பதை தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரை பற்றி பலரும் அறியாத பக்கங்கள் சில இருக்கின்றன.

அண்ணா தொடக்கத்தில் ஒரு புரட்சிகர எழுத்தாளராகவே இருந்தார். மேலும் பல மேடை நாடகங்களை இயற்றி அதில் அண்ணா நடித்தும் இருக்கிறார். இவ்வாறு தனது தொடக்க காலகட்டத்தில் ஒரு சாதாரண கலைஞராகவே இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் பல கிளாசிக் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஜெமினி ஸ்டூடியோஸ். இந்த ஸ்டூடியோவை நிறுவியவர்களில் முதன்மையானவர் எஸ்.எஸ்.வாசன். இவர் ஜெமினி ஸ்டூடியோவை மட்டுமல்லாது, இப்போது மிகப் பிரபலமான வாரப்பத்திரிக்கையாக திகழும் ஆனந்த விகடன் பத்திரிக்கையை நிறுவியவரும் எஸ்.எஸ்.வாசனே.

இந்த நிலையில் பேரறிஞர் அண்ணா “கொக்கொரக்கோ” என்று முதல்முறையில் ஒரு சிறுகதையை எழுதினார். ஆனால் அவர் அவரது பெயரில் எழுதவில்லை. சௌமியா என்ற  பெண் பெயரில் அதனை எழுதி, அந்த சிறுகதையை ஆனந்த விகடனில் பிரசுரிக்க எஸ்.எஸ்.வாசனிடம் கொடுத்தார்.

SS Vasan

“இந்த கதைக்கு எவ்வளவு சன்மானம் வேண்டும்?” என்று அண்ணாவிடம் எஸ்.எஸ்.வாசன் கேட்க, அதற்கு அண்ணா அந்த காலகட்டத்தில் இருந்த எழுத்தாளர்கள் வாங்கிய சன்மானத்தை விட மிக அதிகமான சன்மானத்தை கேட்டிருக்கிறார். எனினும் எஸ்.எஸ்.வாசன் எந்த தயக்கமும் இல்லாமல், அண்ணா அவர்கள் கேட்ட சன்மானத்தை அப்படியே தந்திருக்கிறார். ஒரு எழுத்தாளருக்கு அன்று எவ்வளவு பெரிய மரியாதை இருந்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.

 

Published by
Arun Prasad