Cinema News
கோட் சிறப்பு காட்சி இருக்கா? இல்லையா?!.. காத்திருக்கும் படக்குழு!.. என்னதான் நடக்குது!…
Goat: ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது ரிலீஸாகும் முதல் நாள் சிறப்பு காட்சி ஒன்றை சென்னை, கோவை உள்ளிட்ட சில நகரங்களில் திரையிடுவார்கள். இதற்கு டிக்கெட் விலையும் அதிகம். 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கூட டிக்கெட் விலை இருக்கும்.
ஆனாலும், அந்த காட்சியை பார்க்க சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். எனவே, அதிக விலை கொடுத்து விக்கெட் வாங்கி சிறப்பு காட்சியை பார்த்து ரசிப்பார்கள். நள்ளிரவு 2 மணி, 4 மணி அல்லது 5 மணி என ஏதேனும் ஒரு நேரத்தில் சிறப்பு காட்சியை திரையிடுவார்கள்.
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. சில சமயம் அரசியல்ரீதியாக அழுத்தம் இருந்தால் மட்டுமே சிறப்பு காட்சி திரையிட அரசு தரப்பில் அனுமதி கொடுக்க மாட்டார்கள். விஜ் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் நாளை வெளியாகிறது கோட் திரைப்படம்.
இந்த படத்தின் சிறப்பு காட்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். தமிழகத்தில் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது கோட் திரைப்படம். 10 நாட்களுக்கு முன்பே சிறப்பு காட்சிக்கு விண்ணப்பித்தும் விட்டனர்.
ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை 4 மணிக்கு கோட் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. மேலும், புதுச்சேரியில் முதல் 4 நாட்களுக்கு கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருபக்கம் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டை ரூ.700 முதல் 800 வரை விற்பனை செய்யுங்கள் என வினியோகஸ்தர்கள் அழுத்தம் கொடுப்பதால் 80 சதவீத தியேட்டர்களில் சிறப்பு காட்சியை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கோட் படத்திற்கு சிறப்பு காட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.