தியேட்டரே அதிரப்போகுது.! சிரிப்பு சத்தம் எட்டு ஊருக்கு கேட்கும் போல.! வடிவேலு கூட்டணிய பாருங்கய்யா.!

by Manikandan |
தியேட்டரே அதிரப்போகுது.! சிரிப்பு சத்தம் எட்டு ஊருக்கு கேட்கும் போல.! வடிவேலு கூட்டணிய பாருங்கய்யா.!
X

பலர் திரையுலகில் வருவார்கள் போவார்கள். அது எவளோ பெரிய ஹிட் கொடுத்த நடிகர், இயக்குனராக இருந்தாலும் சரி குறிப்பிட்ட கால அளவுவுக்கு மேல் படம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் மறந்து போய்விடுவார்கள். அவர்கள் எப்போது வருவார்கள் என ரசிகர்கள் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.

ஆனால் வடிவேலு கதையே வேறு. அவரை பிடிக்காதவர்கள் கூட அவரை நடிக்க சொல்லுங்கள் என கேட்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர். ரசிகர்கள் ஆசைக்கு இணங்க அவர் மீண்டும் திரையுலகில் பலமாக கால்பதித்து வருகிறார். காமெடியை மையமாக கொண்டு உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வடிவேலுவை நாயகனாக வைத்து முழுமூச்சாக ரெடியாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் - போனி கபூரை வைச்சி செய்யும் நெட்டிசன்கள்.! அப்டி ஒரு உருட்டு.! இப்போ இப்டி ஒரு உருட்டு.!

naisekar

ஓர் முன்னணி நடிகர் படம் போல லைகா கொஞ்சம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் அரண்மனை செட்டப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங்கில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், வடிவேலு உடன், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி, சிரிச்சா போச்சு ராமர் , லொள்ளுசபா மாறன், என பலர் இருக்கின்றனர். இது போக படத்தில் இன்னும் நிறைய காமெடியன்கள் இருக்கின்றனர்.

கண்டிப்பாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இதுவரை இல்லாத காமெடி திரைப்பட வசூலாக இருக்க போகிறது என ரசிகர்கள் இப்போதே கூறிவருகின்றனர். பார்க்கலாம் நாய் சேகர் அடுத்த அப்டேட் எப்போது வருகிறது என்று.

Next Story