Amala Paul: என்றும் இளமையுடன் அமலாபால்... லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்
சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அமலா பால். முதல் படம் அவருக்கு பெரிய வெற்றியை தராதது மட்டுமல்லாமல் படத்தின் மீது மோசன்மான விமர்சனங்களை பெற்று தந்தது. தொடர்ந்து தோல்வி படங்களையே தந்த அவருக்கு மைனா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதன்பின் மளமளவென முன்னணி இடத்தை நோக்கி சென்றார். விஜயுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வ திருமகள், தனுஷுடன் விஐபி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையால சினிமாவிலும் பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.
அமலா பால் கடந்த 2023-ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான ஜகத் தேசாய்என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இலாய் என்று பெயரிட்டுள்ளனர். தற்போது அமலா பால் தனது குழந்தையுடனும், கணவருடனும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அமலாபால் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
