kavin
காதல் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய கவின்!
பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா கவின் ஜோடியின் ரொமான்டிக் காதல் கிசுகிசுக்கள் தீயாய் பரவி செய்தியாய் வெளியானது. இவர் இருவரின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஆனால், அந்த ஜோடி நிகழ்ச்சியை விட்டு உண்மையில் தங்களது காதலை தொடர்ந்தார்களா? என்ற கேள்விக்கு இன்று வரை விடை தெரியவில்லை.
அவரவர் தங்களது சொந்த வாழ்க்கையில், சினிமாவில் முன்னேறுவது உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்தி பிஸியாகிவிட்டனர். லாஸ்லியா பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதே போல் கவனும் லிப்ட் என்கிற படத்தில் நடித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்து வரும் கவின் தற்போது லாஸ்லியா உடனான காதல் என்ன ஆச்சு என்ற கேள்விக்கு முதன் முறையாக மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.
kavin losliya
அவர் கூறியதாவது, “காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு புரிதல் இருந்திருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயம் அல்லது ஆளுக்காக நாம் கடைசி வரை உண்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போக வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இதையும் படியுங்கள்: இந்த கவர்ச்சிக்கு ஃபுல் மார்க்… கட்டழகை காட்டி திக்குமுக்காட செய்த பூஜா ஹெக்டே….
கண்டிப்பாக அப்படி ஒரு விஷயம் மற்றும் சந்தோசமாக ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன். இதனிடையே நான் என் வேலையையும் காதலிக்கிறேன். அது தான் கடைசி வரை எனக்கு சோறு போட போகிறது என கூறி முடித்தார். இதன் மூலம் லாஸ்லியா உடனான காதல் பிரேக் அப் ஆகி அவர் சிங்கிளாகவே இருக்கிறார் என்பதை தெரிவித்து விட்டார்.
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…