இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?... இளசுகளிடம் அதிக லைக்ஸ் அள்ளும் 'BLAST' ஹீரோயின்!
Jul 1, 2026, 13:58 IST
'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். அதன் பிறகு தமிழில் 'பிக் பாஸ்' கவின் நடித்த 'ஸ்டார்' மூலம் என்ட்ரி ஆனார்.
சமீபத்தில், ப்ரீத்தி முகுந்தன் நடித்த 'பிளாஸ்ட்' படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆனது. இதில் ப்ரீத்தி முகுந்தனுக்கு அப்பாவாக 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அம்மாவாக அபிராமி நடித்திருந்தனர்.
அறிமுக இயக்குநர் சுபாஷ்.கே.ராஜ் இயக்கிய இந்த ஆக்ஷன் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால், OTT-யில் பார்த்தவர்கள் புலம்பத்தான் செய்தார்கள்.
அடுத்ததாக ப்ரீத்தி முகுந்தன் கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.






