கோல்ஃப் கிளப்பில் போட்டோஷூட் நடத்திய Om ஹீரோயின்!
Jul 30, 2026, 23:37 IST
'கிஸ்' என்ற கன்னட படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஶ்ரீலீலா. அதன் பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான 'பகவந்த் கேசரி'-யில் இவர் தான் மமிதா பைஜு கேரக்டரில் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' மூலம் கோலிவுட்டிலும் ஶ்ரீலீலா என்ட்ரி ஆனார். இப்போது இவர் 'ஓம்' என்ற தமிழ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதில் ஹீரோவாக தனுஷ் தான் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்று ஶ்ரீலீலா கோல்ஃப் கிளப்பில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

