கோட் சூட்டில் Meesaya Murukku 2 ஹீரோயின்... மனதைப் பறிகொடுத்த இளசுகள்!
'மீசைய முறுக்கு 2' படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் கெட்டிகா ஷர்மா.
Sep 25, 2026, 21:50 IST
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் கெட்டிகா ஷர்மா. இவருக்கு அமைந்த முதல் படத்தின் தலைப்பே 'ரொமான்டிக்' தான்.
இதை பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கினார். இதில் ஹீரோவாக அவரது மகன் ஆகாஷ் பூரி நடித்தார்.
இந்த படத்துக்கு பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்த கெட்டிகா ஷர்மா, இப்போது தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். 'மீசைய முறுக்கு 2'-வில் இவரும் ஒரு ஹீரோயினாம்.
இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து, மூன்று ரோல்களில் நடித்துள்ளார். இது இன்று தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், கெட்டிகா ஷர்மா இன்ஸ்டாவில் கோட் சூட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
