Categories: gallery

பல நாள் பட்டினி… பணம் இல்லை…ஒரு வேளைதான் சாப்பாடு – சமந்தா உருக்கம்!

சமந்தா தனது பழைய நினைவுகளையும் கடந்து வந்த அனுபவங்களையும் குறித்து பகிர்ந்துள்ளது சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்தார்.

samanta hd

samantha

இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருணம் செய்துக்கொண்டார். பின்னர் 4 வருடத்திலே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் சமந்தா தான் கடந்து வந்த பாதைகளை குறித்து மனம் திறந்துள்ளார்.

அதாவது, கல்லூரி படிக்கும்போது நான் படிப்பில் கெட்டியாக இருந்தேன். ஆனால் வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெரிய பெரிய செல்வந்தர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வெல்கம் கேர்ளாக பணிபுரிந்துள்ளேன். அதற்கு நாள் ஒன்றிற்கு ரூ. 500 கொடுப்பார்கள்.

samantha dp

இதையும் படியுங்கள்: வலிமை ரிலீஸ் தேதியில் இப்படி ஒரு சோக நிகழ்வா.?! அதிர்ந்துபோன ரசிகர்கள்.!

அந்த நேரத்தில் எல்லாம் பணம் இல்லாததால் ஒரு வேலை மட்டும் தான் சாப்பிடுவேன். அதன் பிறகு தான் மாடலிங் துறையில் பணியாற்றி கொஞ்சம் வருமானம் ஈட்டினேன். பின்னர் சினிமா வாய்ப்பு கிடைத்து மெல்ல மெல்ல இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்