சொக்க வைக்கும் பேரழகில் 'சேயோன்' பட ஹீரோயின்... வைரலாகும் ஸ்டில்ஸ்!
Jul 9, 2026, 22:11 IST
ஹிந்தியில் 2 படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்த நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ், 2024-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'Mr.பச்சன்' என்ற படம் மூலம் ஹீரோயினாக நடித்தார்.

இதில் ஹீரோவாக ரவி தேஜா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாக்யஶ்ரீ போர்ஸ், விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' மற்றும் துல்கர் சல்மானின் 'காந்தா' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது இவர் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை 'தாய் கிழவி' இயக்குநர் சிவகுமார் முருகேசன் தான் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு டாப் கியரில் நடந்து வருகிறதாம். தற்போது, பாக்யஶ்ரீ போர்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார்.

