பாரதிராஜாவின் நினைவிடத்தில் குழந்தைகளுடன் சினேகன்!
Jun 14, 2026, 19:15 IST
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு அவரை அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்கு அவரது ரசிகர்கள் நேரில் சென்று பிரார்த்தனை செய்து வணங்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருந்து வரும் சினேகன் தனது மனைவி கன்னிகா மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் சென்று பாரதிராஜாவை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

அப்போது தனது இரு குழந்தைகளையும் கும்பிட வைத்து அவர்களுக்கு பாரதிராஜாவின் அடக்கம் செய்யப்பட்ட மண்ணை நெற்றியில் திலகம் இட்டு வணங்கி கும்பிட்டனர். இதுக்கு முன்னர் பாரதிராஜா உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது கூட அவரை நேரில் சென்று கன்னிகாவும் சினேகனும் பார்த்துவிட்டு நலம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
