பிரியங்காவை காப்பாத்த என்னெல்லாம் பண்றாங்க? ஒரு வேளை செட்டப்பா ?
Priyanka: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஆங்கராக இருப்பவர் பிரியங்கா. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த ஆங்கர் துறையில் நுழைந்து ரசிகர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று இருக்கிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றார்கள் .துருதுருவென பேச்சாலும் நகைச்சுவையான செய்கையாளும் தன்னை சுற்றி இருக்கும் ரசிகர்களையும் போட்டியாளர்களையும் எப்போதுமே கலகலப்பாக வைத்துக் கொண்டிருப்பவர் பிரியங்கா .
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கி வந்தார். இப்போது புதுப்புது ஆங்கர்கள் வந்ததிலிருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. அதனுடன் ஸ்டார்ட் மியூசிக் ஷோவையும் இவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் குக்காக ஒரு போட்டியாளராக நுழைந்து அதிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் பிரியங்கா.
இதையும் படிங்க: பிரியங்கா பத்தி அவ முன்னாள் புருஷன் கிழிப்பான்… தெறிக்க விட்ட சுசித்ரா!…
சமையலே தெரியாத பிரியங்கா எப்படி இந்த நிகழ்ச்சியில் ஒரு குக்காக வந்திருக்க முடியும் என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்தவர் மணிமேகலை. இப்போது அந்த நிகழ்ச்சியை விட்டு அவர் விலகி விட்டார். அதற்கு காரணம் ஒரு பிரபல பெண் ஆங்கரால் தன்னுடைய சுயமரியாதை பறிபோகிறது எனக் கூறி அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டார்.
இனிமேல் இந்த நிகழ்ச்சிக்குள் நான் வரவே மாட்டேன் என்றும் உறுதியாக கூறிவிட்டார் மணிமேகலை. அவர் சொல்வதிலிருந்து பிரியங்காவை தான் மணிமேகலை கூறுகிறார் என அனைவரும் உறுதி செய்து விட்டார்கள். அதிலிருந்து சமூக வலைதளங்களில் பிரியங்காவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஒரு சில பேர் வாய்ஸ் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாவனா விஜய் டிவியை விட்டு போனதுக்கும் அவங்கதான் காரணமா? வெடித்த விவகாரம்
அதில் சில பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வந்தனர். ஒருவகையில் பிரியங்காவால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அவர்கள். அதனால் மணிமேகலைக்கு ஆதரவாக துணை நிற்கிறோம் என பதிவுகளில் போட்டு வந்தனர். இந்த நிலையில் இப்போது சமூக வலைதளங்களில் பிரியங்காவின் பழைய பேட்டியில் இருந்து அவர் அனைவரிடமும் அன்பாக இருப்பது மாதிரியான ஒரு சில காட்சிகள் மட்டும் சில தனியார் யூடியூப் சேனல்கள் இன்ஸ்டா பதிவுகள் என பரப்பி வருகின்றனர்.
அதில் விஜய் டிவியில் காமெடி நடிகராக இருந்த தீனா நான் இந்த அளவுக்கு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் பிரியங்கா தான் என ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதை கட் செய்து சோசியல் மீடியாக்களின் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரால் எத்தனை பேர் கலகலப்பாக இருக்கிறார்கள் என்பதைப் போல சில காட்சிகள் எடிட் செய்து அதையும் வைரலாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாவனா விஜய் டிவியை விட்டு போனதுக்கும் அவங்கதான் காரணமா? வெடித்த விவகாரம்
இந்த மாதிரி பிரியங்காவுக்காக என்னெல்லாம் செய்ய முடியுமோ அதை ஒரு சில வலைதள குரூப்புகள் செய்து வருகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் இது ஒரு வேளை பிரியங்கா தரப்பிலிருந்து அவர் பிஆர்ஓக்கள் செய்யும் வேலையாகக் கூட இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.