More
Categories: Cinema News latest news trailers

காமெடிக்கு ஃபுல் கேரண்டி… பட்டய கிளப்பும் ‘பிஸ்தா’ பட டிரெய்லர் வீடியோ…

சில வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் மீண்டும் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படமாக பிஸ்தா திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை எம்.ராஜேஷ் பாரதி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை ஒன் மேன் புரடெக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் புவனேஸ்வரி சாம்பசிவம் என்பவர் தயாரித்துள்ளார்.

Advertising
Advertising

மேலும், மெட்ரோ படத்தில் நடித்த சதீஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மிர்துளா முரளி மற்றும் அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நடிகர் செந்தில், சதீஷ், யோகிபாபு என மூன்று பேர் காமெடியில் கலக்கியுள்ளனர். இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பிஸ்தா திரைப்படம் அவருக்கு 25வது திரைப்படமாகும். இப்படத்திற்கு எம்.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் பாரதி என்பவர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா

Recent Posts