பாலாவிடம் எவ்ளவோ கெஞ்சினேன்!.. இப்படி பண்ணுவாரு நினைக்கல.. கதறும் பிதாமகன் தயாரிப்பாளர்...

bala thurai
நடிகர் விக்ரம், சூர்யா கெரியரில் மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் ‘பிதாமகன்’. இந்தப் படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் விக்ரமின் நடிப்பு இந்தப் படத்தில் பெருமளவு பேசப்பட்டது. சூர்யாவை வைத்து ‘ நந்தா’, விக்ரமை வைத்து ‘சேது’ போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பாலா தான் அவர்கள் இருவரையும் வைத்து பிதாமகன் படத்தை இயக்கினார்.

surya durai
இந்தப் படம் வெளியாகி தாறுமாறாக ஓடியது. சமீபத்தில் பிதாமகன் தயாரிப்பாளரான துரை என்பவர் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவித்து வருகிறார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
பிதாமகன் தவிர என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் தான் துரை. இவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாக சூர்யா 2.38 லட்சம் கொடுத்து உதவியதாக சில தகவல்கள் வெளியாகின.

bala
இந்த நிலையில் மற்றுமொரு தகவலும் வைரலாகி வருகின்றது. ஏற்கெனவே துரையிடம் பாலா பணத்தை பெற்றுக் கொண்டு அதை திரும்ப தர மறுத்து வருவதாகவும் கூறிவருகின்றனர். அதாவது பாலாவுக்கு ஒரு புதிய படத்திற்காக துரை 25 லட்சம் கொடுத்திருந்தாராம்.
இதையும் படிங்க : சில்க் இறப்பதற்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம்!.. நடந்ததை நினைத்து இப்ப வரைக்கும் மனம் குமுறும் நடிகை..
அதை திரும்ப கேட்க போன துரையிடம் பாலா ‘அது நீங்கள் பிதாமகன் படத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை தான் இது’ என்று அதை திரும்ப கொடுக்க மறுத்து விட்டாராம். ஆனால் இதை குறிப்பிட்டு சொன்ன துரை நான் இதுவரை யாரிடமும் பணம் வாங்கவும் இல்லை, பணப்பாக்கி வைக்கவும் இல்லை என மருத்துவமனையில் இருந்தே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.