
Cinema News
தயாராகிறது மு.க. ஸ்டாலினின் பயோபிக்… யார் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழகத்தின் தற்போதைய முதல்வராக திகழ்ந்து வரும் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கலைஞரின் மகன் என்ற காரணத்தினால்தான் அவரை திமுகவினர் தலைவராக ஏற்றுக்கொண்டனர் என அவரது எதிரிகள் வசைப்பாடினாலும், போராட்டாங்களையே தனது வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர் மு.க.ஸ்டாலின்.

MK Stalin
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ஸ்டாலின். அப்போது அவரது வயது வெறும் பதினான்குதான். அந்த இளம் வயதிலேயே திமுகவின் இளைஞர் பாசறையை தொடங்கினார் ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பல துடிப்பான இளைஞர்களை கழகத்திற்கு பின்னே வரவைத்தார். அதே போல் 1975 ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு மிசா சட்டத்தில் சிறை சென்றார்.

Kalaignar and MK Stalin
இதுவரை ஆறு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்ட ஸ்டாலின், 1996 ஆம் ஆண்டு சென்னை நகரத்தின் மேயராக பதவியேற்றார். அதே போல் கடந்த 2006 ஆம் ஆண்டு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பொறுப்பேற்று பல திட்டங்களை அமல்படுத்தினார். இவ்வாறு பல பொறுப்புகளை தாண்டி தற்போது தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்து வருகிறார்.

MK Stalin and his wife
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக ஒரு சூடான தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அதே போல் இத்திரைப்படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது குறித்தான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறதாம்.
இதையும் படிங்க: படத்தை பார்த்து லெட்டர் போட்ட வெளிநாட்டு ரசிகை… கரம்பிடித்து மனைவியாக்கிக்கொண்ட விஜய்…

Samuthirakani
மேலும் இதில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால், இதில் மு.க.ஸ்டாலினின் கதாப்பாத்திரத்தில் சமுத்திக்கனி நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.