ஒரு தடவை பட்டதே போதும்.! ப்ளீஸ் வேண்டாம்.! கதறும் சூர்யா ரசிகர்கள்.!
இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் சூர்யா நடித்து வெளியான "24" இப்படத்தில் நித்யா மேனன் , சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
விக்ரம் குமார் இயக்கிய அறிவியல் புனைகதை கொண்ட அதிரடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் வெறும் 70 கோடி மட்டுமே ஆனால், சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது, நாகசைதன்யாவுடன் ஒரு படத்தைத் தயாரித்து வரும் விக்ரம் குமார், அடுத்ததாக 24 படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா ரேஞ்சுக்கு ஏற்றவாறு உருவாக்கவுள்ளார் என பேசப்படுகிறது.
அந்த வகையில், சூர்யா இப்படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் மீண்டும் சர்ப்ரைஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும். இப்படத்தின் பட்ஜெட்க்கு ஏற்றவாறு பெரிய படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும் வாய்ப்பு இருப்பதாக குறைப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- சூர்யா படத்தை வெளியிட மறுக்கும் படக்குழு.! ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!
இதனையடுத்து, நேற்று ட்வீட்டரில் #surya24 ட்ரெண்டிங் ஆக இருந்தது, அப்போது அதை பற்றி அறிந்த போது, சூர்யாவின் ரசிகர்கள் 24 படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத மாதிரி தெரிந்தது. இதனால், மறுபடியும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருவதை அறிந்த ரசிகர்கள் வருத்தத்துடன் டிவிட் செய்தது தெரிய வந்தது. ஆனால் என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்ப்போம்.