இந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல!... எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட பாமக எதிர்ப்பு....
ஜெய்பீம் திரைப்படத்தில் வரும் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரம் வன்னியரை சித்தரிப்பதாக கூறி, பாமக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டார்.
ஆனால், சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. படத்தின் இயக்குனர் மட்டும் வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். எனவே, பாமக தரப்பு சூர்யா மீது கோபமாக இருந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. ஆனால், சூர்யா அசரவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என அம்மாவட்ட செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். வன்னியரை இழிபடுத்திவிட்டு மன்னிப்பு கேட்காத சூர்யா நடித்துள்ள இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.