உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா...? சிம்புவின் அந்த படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன பிரபல நடிகர்...!

by Rohini |
simbu_main_cine
X

2012 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் போடா போடி. இந்த படம் மியூஸிக் கலந்த காதல் காமெடி படமாக அமைந்தது. இதுதான் விக்னேஷ் சிவனுக்கு முதல் படமும் கூட.இந்த படத்திற்கு தரன்குமார் இசையமைத்திருந்தார்.

simbu1_cine

இந்த படம் நல்ல விமர்சனங்கள் பெற்றபோதிலும் விஜய் நடித்த துப்பாக்கியுடன் மோதியதால் இந்தப் படம் சரியாக ஓடவில்லை. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் பல கதைகளை எழுதி படங்களை இயக்கவும் செய்துள்ளார். விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் இவர் படம் தான்.

simbu2_cine

இந்த நிலையில் விஜய் சேதுபதி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு விக்னேஷ் சிவனின் போடா போடி படத்தின் கதை ரொம்ப பிடிக்கும். அந்த படத்தின் கதையால் தான் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படம் பண்ணனும்னு எண்ணமே வந்தது எனக் கூறினார்.

simbu3_Cine

மேலும் அவர் கூறுகையில் நான் நிறை தடவை போடா போடி கதை அருமையான கதை. அதை ஹிந்தியில் தயவு செய்து எடு என்று பலமுறை கூறியுள்ளேன், இப்ப உள்ள மக்களுக்கு இந்த மாதிரி படம் ரொம்ப பிடிக்கும் என்றும் கூறினார். ஆகவே விரைவில் போடா போடி படத்தை ஹிந்தியில் எதிர்பார்க்கலாம்.

Next Story