விஜய் என்னாத்த கிழிச்சாரு?.. அரசியல்னா ஜெயிலுக்கு போக ரெடியா இரு!.. கே.ராஜன் கடும் தாக்கு..
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதை எம்.ஜி.ஆரும், சிவாஜியுமே துவக்கி வைத்தனர். அதன்பின் ரஜினி அரசியலில் வருவதாக அறிவித்தார். விஜயகாந்த் அரசியலில் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதோடு, எதிர்கட்சி தலைவராகவும் கலக்கினார்.
அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி கூறிவிட்ட இலையில், இப்போது விஜயின் பெயர் அரசியலில் அடிபட்டு வருகிறது. அவரும் பல வருடங்களாகவே ரசிகர்களை சந்திப்பது, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, அவரின் ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு உதவுவது என பல வேலைகளை செய்து வருகிறார். அதோடு, 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் விஜய் விரைவில் சந்திக்கவுள்ளார். குறிப்பாக அவரின் ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எனவே, எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் ‘விஜய் சில அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். உதவிகள் செய்கிறார். அதை வரவேற்கலாம். ஆனால், மக்கள் தலைவன் ஆக வேண்டுமெனில் மக்களோடு ஒன்றாக இணைய வேண்டும். கீழே இறங்கி வரவேண்டும். போராட்டங்களை நடத்த வேண்டும். தியாகங்கள் செய்ய வேண்டும். சிறைக்கு செல்லக்கூட தயாராக இருக்க வேண்டும்.
ஆனால், இது எதையுமே விஜய் செய்யமாட்டார். அதுதான் இதற்கு முன் இருந்த தலைவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது மட்டும் போதாது. அவர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கவேண்டும். அதற்கு முன் முதலில் விஜய் அரசியல் பயிற்சி எடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை அவர் பேச வேண்டும். இல்லையேல் அவர் அரசியலில் சாதிக்க முடியாது’ என அவர் பேசியுள்ளார்.