கண்ணதாசன் அரை தூக்கத்தில் எழுதிய பாட்டுக்கு தேசிய விருது!.. அட அந்த பாட்டா!..
தமிழ் சினிமாவை தனது தமிழ் மொழித்திறமையால் கட்டி ஆண்டவர் கவிஞர் கண்ணதாசன். மகிழ்ச்சி, சோகம், துக்கம், காதல், கண்ணீர், இறப்பு, தத்துவம் என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டவர். இப்போது கூட மரண வீடுகளில் அவரின் பாடல் வரிகள்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலத்திற்கும் அழிக்கமுடியாத பாடல்களாக கண்ணதாசனின் வரிகள் எப்போதும் நிலைத்திருக்கும்
ஒருமுறை பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ஒரு படத்திற்கு ஒரு பாடல் தேவைப்பட்டது. ஆனால், பல நாட்கள் ஆகியும் கண்ணதாசன் பாடலை எழுதி கொடுக்கவில்லை. அப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் விஸ்வநாதனிடம் ‘பாடலுக்கு ஒத்திகை பார்போமா’ என பாலச்சந்தர் கேட்க, எம்.எஸ்.வியோ கையை பிசைந்துள்ளார்.
இதையும் படிங்க: மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..
அதற்கு காரணம் கண்ணதாசன் இன்னமும் பாடல் எழுதி தரவில்லை. இதனால் கோபமடைந்த பாலச்சந்தர் ‘பெரிய கவிஞர்தான். அதுக்காக எவ்வளவு நாள் காத்திருக்க முடியும்’ என கத்தியுள்ளார். அவரை சாந்தப்படுத்த முயன்ற எம்.எஸ்.வி ‘கவிஞர் மேலேதான் தூங்கி கொண்டிருக்கிறார்.. சத்தமா பேசாதீங்க’ என்றாராம். படத்தின் நாயகன் கமலும் அதையே பாலச்சந்தரிடம் கூறியுள்ளார்.
இதனால் மேலும் கோபமடைந்த பாலச்சந்தர் ‘ரொம்ப நல்லதா போச்சி. நானும் ஷூட்டிங் கேன்சல் பன்னிட்டு தூங்க போகாவா’ என கத்தியுள்ளார். தூங்கிகொண்டிருந்த கண்ணதாசன் இது எல்லாவற்றையும் கேட்டுகொண்டிருந்தார். ஒரு மணி நேரம் போய்விட்ட?து. எம்.எஸ்.வியும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…
ஒருகட்டத்தில் ‘அவர் எந்திரிச்சிட்டாரான்னு போய் பாருங்கய்யா.. நிறைய வேலை இருக்கு.. நானா பாட்டு எழுதமுடியும்’ என பாலச்சந்தர் புலம்ப கமலும், பாலச்சந்தரின் உதவியாளர் அனந்துவும் மேலே சென்று பார்த்துள்ளனர். ஆனால், அங்கே கண்ணதாசன் இல்லை. அவரின் உதவியாளரிடம் கேட்டதற்கு ‘அவர் அப்பவே பாடல்களை எழுதிக்கொடுத்துவிட்டு போய்விட்டார்’ என சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் எந்த பக்கம் போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை.
அந்த பாடல் வரிகளை பார்த்த அனைவரும் அசந்து போய் விட்டனராம். அந்த பரவசத்தில் இருந்து வெளியே வரவே சில நிமிடங்கள் ஆகிவிட்டதாம். ஆம். கண்ணதாசன் 7 விதமாக பாடல்களை எழுதி வைத்திருந்தாராம். அதில் ஒன்றுதான் ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்கிற பாடல். அபூர்வ ராகம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார். கண்ணதாசன் அரைத்தூக்கத்தில் எழுதிய அந்த பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன் இஷ்டத்துக்குலாம் பாட்டு போட முடியாது!.. எம்.எஸ்.வி ஆசையில் மண்ணை போட்ட கண்ணதாசன்…