ஒரு மாசம் ஆனாலும் சரி.. உன்ன விடமாட்டேன்! – பாடலாசிரியரை பாடாய் படுத்திய எம்.ஜி.ஆர்..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாநாயகனாகவே நடித்து வந்தவர் எம்.ஜி.ஆர். இதனால்தான் எப்போதும் அவர் புரட்சி தலைவர் என அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதுவது ஒரு சவாலான காரியமாகும்.
எம்.ஜி.ஆர் எப்போதும் தனது பாடல்களின் வழியாக நல்ல நல்ல கருத்துக்களை மக்களிடம் கடத்துவதற்கு முயற்சிப்பார். எனவே அவரது படத்தில் பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதில் மக்களுக்கு தவறான கருத்துக்களை கூறும் வரிகள் இடம் பெற கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
அப்போது கவிஞர் முத்துலிங்கம்தான் எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்து வந்தார். ஒவ்வொரு பாடலுக்கும் 2 முதல் மூன்று வகையான பாடல்வரிகளை முத்துலிங்கம் எழுதுவார். அதில் எம்.ஜி.ஆர் தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுப்பார். இந்த காரணத்தாலேயே அதிக கவிஞர்கள் எம்.ஜி.ஆருடன் பணிப்புரிவதில்லை.
ஒரு மாதம் பாடல் எழுதிய கவிஞர்:
1978 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வரும் பாடல்களுக்கும் கவிஞர் முத்துலிங்கமே பாடல் வரிகளை எழுதியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் முத்துலிங்கம் எழுதிய வரிகளை தொடர்ந்து பிடிக்கவில்லை என கூறி வந்துள்ளார் எம்.ஜி.ஆர்.
இந்த ஒரு படத்திற்கு மட்டும் ஒரு மாதக்காலம் பணிப்புரிந்துள்ளார் முத்துலிங்கம். அந்த அளவிற்கு பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.