இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்.... நெகிழும் பாடலாசிரியர்

ilaiyaraja spb
இசைஞானி இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். அப்போது இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி. பாடுகிறார். அதுதான் அவரது இசையில் எஸ்பிபி பாடிய கடைசி பாடல். தமிழரசன் என்ற படத்துக்காகப் பாடினார். அதுபற்றி என்னன்னு பார்ப்போமா...
நீ தான் என் கனவு
Also read: கல்யாண வீடா, இழவு வீடா? விஜய்க்குத் தெரியாதா? ஏன் இப்படி செஞ்சாரு? பொங்கும் பிரபலம்
எழுதுகிறபோது இது எஸ்பிபி தான் பாடுவார்னு தெரியாது. பாடலின் பல்லவியை நான் இப்படி எழுதி இருந்தேன். நீ தான் என் கனவு. மகனே வா வா கண் திறந்து. தேயும் வான்பிறை தான். மகனே நாளின் முழுநிலவு. மெதுவாய் திடமாய் எழுவாய் என் மகனே என்று அந்தப் பல்லவி வரும்.
இசைத்தாய்
இன்று அந்தப் பாடலை நினைக்கிறபோது எஸ்பிபி குரல் இசைத்தாய் தன்னோட மகனை எழுப்புவதாக அமைந்ததை நினைக்கிறபோது நெகிழ்வாக உள்ளது.

spb ilaiyaraja
அந்த ஒலிப்பதிவு நாளில் இசைஞானியும், எஸ்பிபியும் சின்ன இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறார்கள். ஆனால் அந்த இடைவெளி தெரியாத அளவுக்கு நட்பின் வெளிச்சம் கூடி இருந்தது. என்றார்.
தேடும் விழியில்
இன்னும் சில வரிகள் வரும். தீராத சோகங்கள் தீரும் நாளில் தீ கூட ஒளி சேர்க்கும் தேடும் விழியில் என்று நான் எழுதி இருப்பேன். இந்த வரிகள் எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்க்கிறபோது இசைத்தாய் எஸ்பிபி.யை மீண்டும் எழுப்பி வந்து பாட வைப்பார் என்று. இந்தப் பாடலைப் பாடி முடித்த பிறகு இசைஞானியைப் பற்றி அவரது நுட்பத்தைப் பற்றி சொன்னார்.
இது அவரது வழக்கம். இந்தப் பாடலிலும் அப்படித்தான். என்ன மாதிரி கம்போஸ் பண்ணிருக்கார்? எப்படி பண்ணினார்னு கேட்டா தெரியாது. அது கம்போஸ் பண்ணும்போது தானா வருதுன்னு சொல்வார். கடவுள் அவரை ரொம்ப நாள் வச்சிருக்கணும்னு வேண்டினார்.
சின்ன இடைவெளி

palani bharathi
தயாரிப்பாளர் பெப்சி சிவா, இந்த ரெக்கார்டிங்கின் போது நாங்க இருந்தோம். அவங்க நட்போடு இருந்ததைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. யூனிட்ல உள்ள எல்லாரும் ரசிச்சிக்கிட்டு இருந்தோம். சின்ன இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திச்சிக்கிட்டாங்க. ரொம்ப வளைந்து கொடுப்பவர் எஸ்பிபி. ஒரு தயாரிப்பாளரோட பாடகர் என்றே சொல்லலாம்.
தமிழரசன்
Also read: மீனாவிடம் உண்மையை சொன்ன பார்வதி… ராதிகாவிடம் உளறிய கோபி… சிக்கிய கதிர்!..
2023ல் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் தமிழரசன். சுரேஷ் கோபியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தான் எஸ்பிபி. பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.