இரண்டாம் உலகப் போர்… வெறும் பரோட்டாவை வைத்து பாட்டெழுதிய புரட்சி கவிஞர்… வேற லெவல்!!
1951 ஆம் ஆண்டு டி.ஆர்.ராமச்சந்திரன், லலிதா, பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சிங்காரி”. இத்திரைப்படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் வெளியான திரைப்படம்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் அப்போது ஆட்சி செய்த வெள்ளையர்கள், மிதமிஞ்சிய கோதுமையை இந்தியர்களுக்கு இலவசமாக தந்தார்கள். அப்போதுதான் கோதுமை சார்ந்த உணவு வகைகள் தமிழ்நாட்டில் அறிமுகமானது. அதில் உருவானதுதான் பரோட்டா என்ற உணவு.
அதற்கு முன்பு வரை கோதுமை உணவு என்பது தமிழர்களுக்கு பழக்கமில்லாத ஒன்றாகும். அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் பரோட்டாவை வேறு வழியில்லாமல் சாப்பிட்டார்கள் என கூறுகின்றனர் சிலர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பரோட்டா ஒரு முக்கிய உணவாக ஆகிப்போய்விட்டது என்பது வேறு விஷயம்.
இந்த நிலையில் பிரபல கவிஞரான தஞ்சை ராமையா தாஸ் “சிங்காரி” திரைப்படத்தில் எழுதிய ஒரு பாடலை குறித்து என்.எஸ்.கிருஷ்ணன் புகழ்ந்து தள்ளினாராம். இந்த தகவலை ஒரு விழாவில் கவிஞர் வாலி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “ஐஸ்வர்யா ராய்தான் வேணும்”… ஒற்றைக்காலில் நின்ற ரஜினிகாந்துக்கு டிமிக்கி கொடுத்த தயாரிப்பாளர்…
அந்த பாடலில் “ஓரு ஜான் வயிறு இல்லாட்டா, இந்த உலகினில் ஏது கலாட்டா, உணவு பஞ்சமே வராட்டா, நம்ம உயிரை வாங்குமா பரோட்டா” என்று ஒரு வரியை எழுதியிருக்கிறார் தஞ்சை ராமையாதாஸ். இந்த வரியை மெச்சி புகழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன், தஞ்சை ராமையாதாஸை நேரிலேயே அழைத்து “மக்களின் எண்ணத்தை பிரதிபலித்த கவிஞர்” என பாராட்டினாராம்.