இனிமே உன் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன்!.. ஷங்கரிடம் கடுப்பான வாலி.. என்ன காரணம் தெரியுமா?...

கவிஞர் வாலி தமிழ் சினிமா கண்டெடுத்த ஒரு அற்புத கவிஞர். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆர் “என்ன ஆண்டவரே”என்றும், சிவாஜியோ “என்ன வாத்தியாரே”என்றும் பாசத்துடன் அழைத்து வந்தனர். கருப்பு வெள்ளை நடிகர்கள் முதல் தற்கால நடிகர்கள் வரை என எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பாடல்களை எழுதியதால் இவர் வாலிபக் கவிஞர் என்று போற்றப்படுகிறார்.

ஆரம்பக்கட்ட காலத்தில் திரைப்பட பாடல் எழுதும் வாய்ப்பு எப்போதாவது வந்ததால் நிரந்தர வருமானம் இல்லாமல் வறுமையில் வாடினார் வாலி. அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பல படங்களுக்கு பாடல் எழுதியதில் அவரின் வாழ்க்கை மாறியது.

Kavingnar Vali

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களில் கண்டிப்பாக வாலி ஒரு பாடலாவது எழுதுவார். ஷங்கர் முதலில் இயக்கிய திரைப்படம் ஜெண்டில்மேன். இப்படம்199ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்காக ஷங்கர் முதலில் தேர்ந்தெடுத்த ஹீரோ சரத்குமார். ஆனால் சரத்குமார் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் “ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை” தேர்ந்தேடுத்தார் ஷங்கர்.

இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசைஅமைத்திருப்பார். இப்படத்தின் ஹிட் அடித்த பாடல் “சிக்கு புக்கு ரயிலே”. இளசுகளை ஆட்டம்போட வைத்த பாடல் இது. முதலில் “சிக்கு புக்கு ரயிலே’ என்ற வரிகள் எல்லாம் நல்லா இல்லை நீங்க வேற வரிகளை எழுதி கொடுங்கள் என்று வாலியிடம் கேட்டாராம் ஷங்கர்.

chiku

chiku

உடனே வாலியும் வேற வரிகளை எழுதி கொடுத்தார். பாடல் ஒலிப்பதிவின் போது அங்கு சென்றார் வாலி. அப்போது அவர் முதலில் எழுதிகொடுத்த “சிக்கு புக்கு ரயிலே” பாடல் வரிகளைத்தான் பாடகர் பாடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த வாலி உடனே ஷங்கரிடம் ‘நான் முதலில் இந்த வரிகள்தானே எழுதிகொடுத்தேன்.. ஆனால் நீ இந்த வரிகள் வேண்டாம்’ என்று சொல்லிதானே என்னிடம் வேறு வரிகளை கேட்டாய். ஆனால் நீ அதே வரிகளை இப்போது பதிவு செய்கிறாய். இனிமேல் நான் உன் படத்துல பாட்டு எழுதிகொடுக்கமாட்டேன் என்று கோபமாக கூறினாராம் வாலி.

இதை ஒரு பேட்டியில் சொன்ன வாலி ‘வாலி என்கிற பெயருக்கு ஏற்ப எனக்கு சில சமயங்களில் குரங்குப்புத்தி எட்டிப்பார்க்கும் என்று கூறினார்.

 

Related Articles

Next Story