Cinema History
காதலிக்காதவரையும் காதல் பித்து பிடிக்க வைக்கும் வாலியின் வரிகள்… பாடல் இடம்பெற்ற படம் இதுதான்!
நாம் பல சமயங்களில் பாடலைக் கேட்கும்போது அதன் இசையை மட்டுமே ரசிப்போம். ஆனால் அதன் வரிகளை அவ்வளவாகக் கவனிக்க மாட்டோம். இதற்கு என்ன காரணம் என்றால் வரிகளை விட இசை விஞ்சி நிற்கிறது. ஆனால் அந்தக்கால தத்துவப்பாடல்கள் ஆனாலும் சரி. காதல் பாடல்கள் ஆனாலும் சரி. இசையுடன் வரிகளையும் நாம் கவனிப்போம்.
இந்தப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலாகவும் இருக்கும். அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த படம் எங்க வீட்டுப் பிள்ளை. இதில் வரும் பாடல் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே. இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இசை அமைத்தவர் எம்எஸ்.விஸ்வநாதன்.
பாடலின் பல்லவியில் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, குடியிருக்க நான் வர வேண்டும், குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும் என்று அழகான வரிகள் வரும். இது நாயகன் நாயகியிடம் கேள்வி கேட்பது போல அமைந்திருக்கும். அதற்கு நாயகி சொல்லும் பதில் இதுதான். குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்.
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும் என்பார். அதாவது இந்த வரிகளில் காதலின் உள்ளமே எனக்கு வீடு என நாயகன் சொல்லாமல் சொல்கிறார். இது தற்குறிப்பேற்ற உவமை அணி. அடுத்து வரும் வரிகளில் திங்கள் தங்கையாகவும், தென்றல் தோழியாகவும் உருவகப்;படுத்தப்பட்டு நாயகி ஊர்வலம் வருவதாக எழுதப்பட்டுள்ளது.
பிறகு நாயகியின் இடை குறுகி மின்னல் போன்றும், நடை அன்னம் போல் மெதுவாகவும் இருப்பதாக கூறுகிறார். அதே நேரம் நாயகியோ மின்னலும், அன்னமும் என் இடையையும், நடையையும் கேட்டால் கூட உன்னைக் கேட்டுத்தான் தருவேன் என்கிறாள்.
இதையும் படிங்க… அஜித்துக்கு வில்லனாகும் விஜய் அப்பா… புதுக்கூட்டணியால இருக்கு! ஆச்சரியத்தில் ரசிகர்கள்
நாயகன் கொடை வள்ளல் அல்லவா? அதனால் நீயாகக் கொடுத்தாலும், அவையாக எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. உன் அழகு ஒருபோதும் குறையாது என்கிறான். அந்த நேரம் நாயகிக்கு ஒரு பலத்த சந்தேகம் வந்து விடுகிறது. இந்த அழகு இருப்பதால் தானே நாயகன் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறான். இது இல்லாவிட்டால் உங்களுக்கு ஆசை வருமா என்று கேட்கிறாள். இப்படி வாலிபக் கவிஞர் வாலியின் வரிகள் காதலிக்காதவரையும் காதல் பித்து பிடிக்க வைத்து விடுகிறது.