More
Categories: Cinema News latest news

கொட்டும் மழை… கவிஞர் வாலியை காரில் ஏற்றிச்சென்ற முக்கிய நபர்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

கவிஞர் வாலி “வாலிப” கவிஞர் என அழைக்கப்பட்டவர். அவரால் எம் ஜி ஆருக்கும் பாட்டெழுத முடியும், சிவகார்த்திகேயனுக்கும் பாட்டெழுதமுடியும். காலத்திற்கு ஏற்றார்போல் தன்னை அப்டேட் செய்துகொண்டவர் வாலி.

மொழியை கொண்டு அசரவைக்கும் வரிகளை படைத்து நம்மை “அட” போடவைப்பவர் வாலி. ஒவ்வொரு வரிகளிலும் அவ்வளவு கவித்தன்மைகள் நிறைந்திருக்கும்.

Advertising
Advertising

இவர் எழுதிய பாடல்கள் எல்லாம் காலத்துக்கும் பேசப்படுபவை. அந்தளவுக்கு அர்த்தங்களும்  தத்துவங்களும் பொதிந்துகிடப்பவை. இவர் இறந்த பின்பும் இவரது பாடல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. தனது கடைசி காலத்திலும் தமிழுக்காக ஓயாது உழைத்தவர் வாலி.

இவர் பல பேட்டிகளில் அவருக்கு நேர்ந்த பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது கடைசி காலங்களில் ஒரு பேட்டியில் அவருக்கு நடந்த எதிர்பாராத சம்பவம் ஒன்றை குறித்து பகிர்ந்துகொண்டார்.

வாலி இளம்வயதில் ஒரு முறை மும்பைக்குச் சென்றிருக்கிறார். அப்போது ஒரு நாள் இரவு நேரம் நன்றாக மழை பெய்துகொண்டிருந்தபோது வாலி ரயில்வே நிலையத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தாராம். அப்போது அவரது அருகில் ஒரு கார் வந்து நின்றிருக்கிறது. உள்ளே இருந்த ஒருவர் கதவின் கண்ணாடியை இறக்கி வாலியை பார்த்து “எங்கே போகிறாய்?” என ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார். “நான் ரயில்வே ஸ்டேஷன் சென்றுகொண்டிருக்கிறேன்” என வாலி கூறியிருக்கிறார்.

அதற்கு அவர் “காரில் ஏறிக்கொள்” என கூறியிருக்கிறார். வாலி “நான் முழுவதும் நனைந்திருக்கிறேன். சீட் ஈரமாகிவிடும்” என கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் “பரவாயில்லை ஏறு” என கூறியிருக்கிறார். வாலி அவரது காரில் ஏறிக்கொள்கிறார்.

ரயில்வே நிலையத்தில் இறங்கிய பிறகு அந்த நபரிடம் “மிகவும் நன்றி, உங்கள் பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா?” என வாலி கேட்டிருக்கிறார். அந்த நபர் “மக்கள் என்னை ஜே ஆர் டி டாடா” என்று அழைப்பார்கள் என கூறியிருக்கிறார். இதை கேட்டவுடன் வாலி ஷாக் ஆகியிருக்கிறார்.

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தொழிலதிபர் இவ்வளவு சாதாரணமாகவும் மனிதாபிமானத்தோடும் நடந்துகொண்டது வாலியை வியப்படையச்செய்திருக்கிறது.

Published by
Arun Prasad

Recent Posts