ஒரு பாட்டுக்கு 12 வருடங்கள் காத்திருந்த வைரமுத்து!.. ரஹ்மான் செய்த மேஜிக்!. ஒரு நெகிழ்ச்சி தருணம்...

by சிவா |
vairamuthu
X

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்தில் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்கிற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக நுழைந்தவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து. பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் மண்வாசனை, காதல் ஓவியம், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் ஆகிய படங்களில் காலத்திற்கும் மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்தது.

வைரமுத்துவின் கவிதை வரிகளும், இளையராஜாவின் அற்புதமான மனதை மயக்கும் இசையும், பாரதிராஜா அதை அழகாக திரையில் காட்டிய விதமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஆனால், யார் கண் பட்டதோ!.. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளையராஜா - வைரமுத்து கூட்டணி பிரிந்தது.

இதையும் படிங்க: நீயெல்லாம் ஞானியா?.. இளையராஜாவுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த வைரமுத்து!.. இப்படி சொல்லிட்டாரே!..

அவர்கள் இருவரையும் இணைக்க பாரதிராஜா எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. இளையராஜாவுடன் மீண்டும் சேர வைரமுத்து தயாராக இருந்தும் இளையராஜாவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், வைரமுத்துவை பாரதிராஜா விடவில்லை. பாரதிராஜாவின் படங்களில் வைரமுத்து தொடர்ந்து எழுதி வந்தார். இதுவரை தனது பாடல் வரிகளுக்காக 5 தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கிறார் வைரமுத்து.

அதோடு, பல கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். இவரின் பாடல்கள் எப்படி ரசிகர்களால் ரசிக்கப்பட்டதோ அப்படியே வைரமுத்துவின் கவிதைகளுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இளையராஜாவுக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்தார் வைரமுத்து.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராய்க்கு எழுதுனது!.. நேக்கா ஐஸ்வர்யா ஷங்கருக்கு போட்டுட்டாரே!.. பலே கில்லாடி வைரமுத்து!..

இருவரின் கூட்டணியிலும் பல இனிமையான பாடல்கள் வெளிவந்தது. ஆனால், ஒருகட்டத்தில் இந்த கூட்டணியும் பிரிந்துவிட்டது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வைரமுத்து ஒரு பாடலுக்காக 12 வருடங்கள் காத்திருந்ததாக சொல்லியிருக்கிறார். ஒரு பாடலை எழுதி வைத்திருந்தார். அதை எம்.எஸ்.வியிடம் கொடுத்தேன் திரும்பி வந்தது. சங்கர் கணேஷிடம் கொடுத்தேன். திரும்பி வந்தது. அம்சலேகா, வட இந்திய இசையமைப்பாளர் என பலரிடமும் கொடுத்தேன்.

12 வருடங்களாக அந்த பாடலை இசைக்குள் கொண்டு வர வேண்டுமென எனது பையிலேயே வைத்திருந்தேன். நடக்கவில்லை. ஒருநாள் சுரேஷ் மேனன் என்னிடம் புதிய முகம் படத்திற்கு இலங்கையில் படப்பிடிப்பு. அவசரமாக பாட்டு வேண்டும் என்றார். உடனே அந்த பாடலை எடுத்து ரஹ்மானிடம் கொடுத்தேன். 10 நிமிடங்களில் இசையமைத்தார். நான் எழுதி அவர் இசையமைத்த ஒரே பாடல் அதுதான். அந்த பாடல்தான் ‘கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு.. அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு’ என வைரமுத்து பேசி இருந்தார்.

Next Story