வெங்கட்பிரபுவுக்கு டைட்டில் சொன்ன கவிஞர் வாலி!.. இப்படித்தான் அந்த தலைப்பு வந்துச்சா?!.
ஒரு படத்திற்கு நடிகர், நடிகை எவ்வளவு முக்கியமோ அதேபோல் மிகவும் முக்கியமான ஒன்று படத்தின் தலைப்பு ஆகும். ஒரு படத்தின் தலைப்புதான் அப்படத்திற்கான முதல் புரமோஷன். தலைப்புதான் ரசிகர்களை உள்ளே இழுக்கும். எனவே, தலைப்பிற்கு இயக்குனர்கள் மிகவும் மெனக்கெடுவார்கள். நல்ல தலைப்பு அமையவில்லை எனில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின் தலைப்பு தேர்ந்தெடுப்பார்கள்.
இயக்குனர், பாடலாசிரியர், பாடல், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்ட கங்கை அமரனின் மூத்தமகன் வெங்கட்பிரபு. நடிகராக இருந்து, உதவி இயக்குனராக மாறி, அதன்பின் இயக்குனராக மாறியவர். சென்னை 28 முதல் மாநாடு வரை ரசிகர்களை கவரும்படியான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக துவங்கிய திரைப்படம்தான் சென்னை 28. இப்படத்திற்கு ‘எங்க ஏரியா உள்ள வராத’ என்றுதான் முதலில் தலைப்பு யோசித்திருந்தாராம். இந்த தலைப்பை அவர் கவிஞர் வாலியிடம் கூற ‘இப்படி தலைப்பு வைத்தால் உன் படத்தை யாரும் வாங்க மாட்டார்கள். தலைப்பில் நெகட்டிவ் இருக்கக் கூடாது. சென்னை 28’ என வை என அவர்தான் அந்த தலைப்பையே கூறியுள்ளார். வெங்கட்பிரபுவும் அதே தலைப்பை வைத்தே அப்படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படி பல படங்களின் தலைப்புகளின் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கும் போல!...
இதையும் படிங்க: சிவாஜியின் 100 ஆவது படத்துக்கு நடந்த போட்டி… நடிகர் திலகத்தை கைவிட்டு எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்ட பிரபல இயக்குனர்…