போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்திய தமிழ் சினிமா நடிகர்கள்

by sankaran v |   ( Updated:2022-01-30 17:19:07  )
போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்திய தமிழ் சினிமா நடிகர்கள்
X

police kamal

போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்கான தோற்றத்தில் பல நடிகர்கள் தமிழ்சினிமாவில் நடித்து அசத்தியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சில நடிகர்களை இங்கு பார்க்கலாம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என பல பழைய நடிகர்களும் காவல் அதிகாரி வேடத்தில் நடித்து காவல் துறைக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். இருந்தாலும் நாம் 80ஸ் கால கட்டத்தில் இருந்த நடிகர்களின்; மறக்க முடியாத படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.

விஜயகாந்த்

police vijayakanth

காவல்துறை அதிகாரி வேடத்தில் கம்பீரமாக நடித்த நடிகர்களில் முதன்மையானவர் யார் என்றால் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தான். அவர் பேசும் வீர வசனங்கள் போல் இதுவரை எந்த நடிகரும் பேசியதில்லை. அது அவருக்கே உரிய தனி ஸ்டைல் என்று சொன்னால் மிகையாகாது. ஊமை விழிகள், தர்மமம் வெல்லும், மாநகர காவல், சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், கேப்டன் பிரபாகரன், தாய்மொழி, வல்லரசு, வாஞ்சிநாதன் என்று இவர் காவல் துறை அதிகாரியாக பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். எல்லா படங்களிலுமே அவர் தத்ரூபமாக நடித்து இருப்பார் என்பது தான் ஆச்சரியம்.

ரஜினிகாந்த்

police rajni

ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடித்த படங்கள் பல உள்ளன. அவற்றில் முதன்மையானது மூன்று முகம். அலெக்ஸ் பாண்டியனாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு விடுவார். அன்புக்கு நான் அடிமை, பாண்டியன், பேட்ட, தர்பார் கொடி பறக்குது, கிராப்தார், உன் கண்ணில் நீர் வழிந்தால், குரு சிஷ்யன் என பல படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் முதன்மையானது காக்கிசட்டை. இதில் போலீஸாக அவர் வர வேண்டும் என்று எத்தனையோ முயற்சிகள் செய்வார்.
அதன்பின் போலீஸ் ஆவார். வேட்டையாடு விளையாடு படத்தில் டிஜிபி ராகவனாக மிடுக்கான தோற்றத்தில் வந்து அசத்துவார். அதேபோல் குருதிப்புனல் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார்.

சத்யராஜ்

police sathyaraj

சத்யராஜ் உயரமான நடிகர் என்பதால் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் போது மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக இருப்பார். உதாரணத்திற்கு வால்டர் வெற்றிவேல் படத்தைச் சொல்லலாம்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தாய்நாடு, பிக்பாக்கெட், சின்னப்பதாஸ், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, வீரப்பதக்கம், ராமச்சந்திரா, அய்யர் ஐபிஎஸ் ஆகிய படங்களில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார். இவரது படங்களில் வால்டர் வெற்றி வேல் பிரம்மாண்மான வெற்றியைப் பெற்ற படம்.

அர்ஜூன்

police arjun

ஆகஸ்ட் 15ல் இவர் பிறந்ததால் நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர். இவரது பல படங்களில் நாட்டுப்பற்று உள்ள சீன் வரும். அதுதான் இவரது படத்தின் பிளஸ் பாயிண்ட்டாகவும் இருக்கும். சேவகன், ஒற்றன், மருதமலை, ஜெய்ஹிந்த், குருதிப்புனல், செங்கோட்டை, சுபாஷ், அடிமைச்சங்கிலி, தாயின் மணிக்கொடி, பரசுராம், ஆணை, ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்களில் போலீஸாக நடித்து அசத்தியிருப்பார். இவற்றில் ஜெய்ஹிந்த் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

Next Story