கார்த்தியை கைது செய்த போலீஸ்!.. இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்!.. நடந்தது இதுதான்!..

by சிவா |
karthi
X

நடிகர் சிவக்குமாரின் இளையமகன் கார்த்தி. சூர்யாவின் தம்பியான இவர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் அறிமுகமானார். ஆனால், முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை கொடுத்து மிரட்டியிருந்தார். பல படங்களில் நடித்த நடிகர் போல ஒரு அறிமுக நடிகர் நடித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

பொறியியல் பட்டதாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அதன்பின் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படித்தார். அங்கு படிக்கும்போதே படங்களை இயக்குவதில் ஆர்வம் ஏற்பட சினிமா இயக்கம் பற்றியும் படித்தார். சில மாதங்கள் கிராபிக்ஸ் டிசைனராகவும் வேலை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…

அதன்பின் சினிமாதான் தனது கேரியர் என்பதை முடிவு செய்தார். அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவரின் அண்னன் சூர்யா இயக்கத்தில் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக வேலை செய்தார்.

அதன்பின் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வரவே பருத்திவீரன் படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். சிறுத்தை, பையா, மெட்ராஸ், கொம்பன், கைதி, பொன்னியின் செல்வன், சர்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லா படத்திலையும் செஞ்சாச்சு… இதுலையா மிஸ் பண்ணுவாரு.. விஜயின் பக்கா ப்ளான்!.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கார்த்தி ‘அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக வெளியே போவது என முடிவு செய்தோம். இரண்டு காரில் நண்பர்கள் சென்றோம். முன்னே ஒரு கார் போக, பின்னால் சென்ற காரில் நான் இருந்தேன். முன்னே சென்ற கார் சாலை விதிகளை மீறி வேகமாக போனது.

அதைப்பார்த்து நாங்களும் காரை வேகமாக ஓட்டினோம். அப்போது வாலிபர்கள் என்பதாலும் இளரத்தம் என்பதாலும் சாலை விதிகளை நாங்கள் மதிக்கவில்லை. பின்னால் போலீஸ் கார் வந்து எங்களை மடக்கினார்கள். காவல் நிலையம் சென்று 250 டாலர் அபராதம் கட்டினோம். ஆனால், அதன்பின் இப்போது வரை சாலைவிதிகளை சரியாக கடைபிடித்தே காரை ஓட்டுகிறேன்’ என கார்த்தி சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: கமல் எடுத்த விடாமுயற்சி… ரஜினி வைத்த விக்… விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… இயக்குனர் சொல்லும் சுவாரசியங்கள்!

Next Story