கட்டம் கட்டப்படும் 'முன்னாள்' நடிகை... விரைவில் 'அதுக்கும்' வாய்ப்பு இருக்கு?

by சிவா |
actress
X

சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வலைதளமாக டிவிட்டர் திகழ்கிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், போலீசார் என பலதரப்பட்ட நட்சத்திரங்களும் இந்த வலைதளத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பாலோயர்கள் இல்லாத ஐடிகளுக்கும் நட்சத்திரங்கள் பதிலளிப்பதால் அனைவரின் மனம் கவர்ந்த வலைதளம் என்ற பெயரும் இதற்குண்டு. என்றாலும் 'பீடை சந்து' என்ற பட்டப்பெயரும் இதற்குண்டு.

twitter

ஏனெனில் யாராவது தங்களது மகிழ்ச்சி தருணங்களை பதிவிட்டால் விரைவில் அவர்களுக்கு வம்பு வழக்குகள், காயங்கள் ஏற்படும் என்பது இதன் மற்றொரு முகமாக உள்ளது. எனவே தான் இந்த வலைதளத்தை சந்து என்றும் 'பீடை சந்து' என்றும் ட்விட்டர்வாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். சமீபகாலமாக இதில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு சிறைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் தரக்குறைவாக பேசுபவர்கள் பலரையும் கைது செய்து காவல்துறை அதிரடி காட்டி வருகிறது.

rumour

அந்த வகையில் முன்னாள் நடிகை ஒருவருக்கு தமிழக காவல்துறை சார்பில் ஸ்கெட்ச் போடப்பட்டு வருவதாக ட்விட்டர்வாசிகள், தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் நடிகையாக இருந்தாலும் ரசிக சண்டையில் ஆரம்பித்து அரசியல் சண்டை வரை அருமையான கருத்துக்களை சிதற விடும் நடிகை அவர். பகடி செய்கிறேன் என்கிற பெயரில் அநாகரிகமான கருத்துக்களையும், தடித்த வார்த்தைகளையும் சேர்த்து தொடர்ந்து ட்வீட் செய்வதால் தான், அந்த நடிகை கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுவரை அவருக்கு நேரம் நன்றாக இருந்திருக்கலாம் ஆனால் ட்விட்டரில் இப்படியே பதிவிட்டு வந்தால் கைது நிச்சயம் என உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

சத்தியராஜுக்கு பெரிய ஹிட் அடித்த அரசியல் படத்தில் அந்த நடிகை நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story