Cinema History
வடிவேலு காமெடியால் வந்த பிரச்சனை!.. கூட்டமாக வந்த போலீஸ்!.. பதறிப்போன வைகைப்புயல்!..
ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் வடிவேலு. அதன்பின் சின்னக் கவுண்டர், சிங்கர வேலன், தேவர் மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருகட்டத்தில் கிராமத்திய படங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் குடியேறினார். வடிவேலுவின் காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
உடல்நிலை காரணமாக கவுண்டமணி சினிமாவிலிருந்து விலக அந்த இடத்தை பிடித்தார் வடிவேலு. தனக்கென ஒரு குழுவை உருவாக்கி அவர்களுடன் இணைந்து காமெடி செய்து முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். வின்னர் கைப்புள்ளை, கிரி வீரபாபு, ஏழுமலை என்கவுண்டர் ஏகாம்பரம், தலைநகரம் நாய் சேகர் என ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இதையும் படிங்க: வடிவேலுக்கு நன்றின்னு ஒன்னு இருந்திருந்தா அதை செய்திருக்கணும்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..
வடிவேலுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவானது. கவுண்டமணிக்கு பின்பு அதிக ரசிகர்களை உருவாக்கிய காமெடி நடிகராக வடிவேலும் மாறினார். சுராஜ் இயக்கத்தில் அர்ஜூனுடன் இணைந்து வடிவேல் நடித்த திரைப்படம்தான் ஏழுமலை. இந்த படத்தில் ஏட்டாக, என்கவுண்டர் ஏகாம்பரம் என்கிற பெயரில் அலப்பறை செய்திருந்தார்.
இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கடைவீதியில் பிச்சைக்காரனுடன் இணைந்து வடிவேலுவும் மாமூல் வாங்குவார். செம கலகலப்பாக இருக்கும். இந்த படம் வெளிவந்த பின் போலீஸ்காரார்கள் சிலர் வடிவேலுவின் அலுவகத்திற்கு சென்று ‘போலீஸ் என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா?.. நாங்களும் பிச்சைக்காரங்களும் ஒன்னா?’ என அவரிடம் கோபத்தை காட்டி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அந்த வடிவேலு படத்தில் நடிக்க வேண்டியது விஜயா?!.. படம் வேறலெவலா இருந்திருக்குமே!…
‘ஐயோ சாமி.. இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் செஞ்சேன்’ என அப்படத்தின் இயக்குனர் சுராஜ் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறார் வடிவேலு. அதன்பின் அவர்கள் சுராஜையும் தொடர்பு கொண்டுள்ளனர். அவரோ ‘இல்ல சார் ஒரு நல்ல போலீஸையும் காட்டி இருக்கேன். கெட்ட போலீஸையும் காட்டி இருக்கேன்’ என சொல்ல அவர்கள் சமாதானம் ஆகவில்லை.
அதன்பின் தனக்கு தெரிந்த உயர் போலீஸ் அதிகாரிகளுடன் இயக்குனர் பேச ‘அந்த காட்சியை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது’ என அவர்களும் கன்வின்ஸ் ஆகி இருக்கிறார்கள். அதன்பின்னரே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாம். இந்த தகவலை இயக்குனர் சுராஜே ஊடகம் ஒன்றில் கூறியுள்ளனர்.