×

தமிழகத்தை அதிமுக ஆளும்… திமுக வாழும் – ராஜேந்திர பாலாஜி பன்ச் !

தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களை சந்திப்பது என்றால் பத்திரிக்கையாளர்கள் குஷியாகிவிடுவார்கள். அவர்கள் பேச்சில் ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களோ நகைச்சுவையான் கண்டெண்ட்களோ கிடைக்கும். அந்த தலைவர்களில் அதிமுகவின் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். நேற்று 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ’கமல்ஹாசன் தனது கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில்
 
தமிழகத்தை அதிமுக ஆளும்… திமுக வாழும் – ராஜேந்திர பாலாஜி பன்ச் !

தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களை சந்திப்பது என்றால் பத்திரிக்கையாளர்கள் குஷியாகிவிடுவார்கள். அவர்கள் பேச்சில் ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களோ நகைச்சுவையான் கண்டெண்ட்களோ கிடைக்கும். அந்த தலைவர்களில் அதிமுகவின் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். நேற்று 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது  செய்தியாளர்கள் அவரிடம் ’கமல்ஹாசன் தனது கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளாரே’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராஜேந்திர பாலாஜி ‘கமல்ஹாசன் எல்லாம் வெற்றி பெறுவது குறித்து இன்னு 25 ஆண்டுகளுக்குப் பிறகே யோசிக்கவேண்டும். அவரெல்லாம் நகரத்துக் கட்சி. கிராமப்புறங்களில் அவருக்கு வேலையே இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆளும், திமுக வாழும். வேறு கட்சிகள் தமிழகத்திற்குள் வர முடியாது. இந்த இரண்டு கட்சிகளுக்குதான் கிராமங்களில் கட்டமைப்பு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News