×

கழக தலைவர் மு.கருணாநிதி பிறந்தநாள்... நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்...

மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மு.கருணாநிதியின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார்.
 
kalaignar-stalin

தமிழகத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பிய முத்துவேல் என்கிற மாமனிதன் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் தொண்டர்கள் வீடுகளில் இருந்தபடியே கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செய்து பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

இரண்டு ஆயுதங்களைக் கொண்டுதான் அவர் அரசியலில் நுழைந்தார் திமுக என்னும் கழகத்தை உண்டாக்கியவர். ஒன்று அவரது பேச்சுத் திறமை, இன்னொன்று எழுத்துத் திறமை. அப்போது அவரிடம் பண பலமும் இல்லை, அதிக படிப்பும் இல்லை.

மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மு.கருணாநிதியின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தியதோடு, அவருடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் சென்று மரியாதை செலுத்தினர். 

இதனைத்தொடர்ந்து நினைவிடத்தில் மரக்கன்று நட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவிட பராமரிப்பு பணியிலுள்ள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News