×

அதிமுக தொண்டர்களே தாய் கழகத்துக்கு வாருங்கள் –ஸ்டாலின் வேண்டுகோள் !

தேனியில் நடைபெற்ற தொண்டர்கள் இணைப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் இருக்கும் உண்மையான தொண்டர்கள் திமுகவுக்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் மற்றும் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் இணைப்பு விழா நேற்று தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தங்க பலக் கட்சிகளில் இருந்து விலகிய தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘இப்போது
 
அதிமுக தொண்டர்களே தாய் கழகத்துக்கு வாருங்கள் –ஸ்டாலின் வேண்டுகோள் !

தேனியில் நடைபெற்ற தொண்டர்கள் இணைப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் இருக்கும் உண்மையான தொண்டர்கள் திமுகவுக்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் மற்றும் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் இணைப்பு விழா நேற்று தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தங்க பலக் கட்சிகளில் இருந்து விலகிய தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ‘இப்போது அதிமுகவின் உண்மையானத் தலைவர்கள் அமித்ஷாவும், மோடியும்தான். ஜெயலலிதாவோ, எம்ஜிஆரோ இல்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அடிமைகளாக இருப்பவர்களின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இன்றைக்கும் அதிமுகவில் உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கும், தொண்டர்கள் அங்கு இருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. திராவிட இயக்கமாக இருக்கும் திமுகதான் உங்கள் இயக்கம். இந்தக் கூட்டத்தின் மூலமாக அவர்களையும் திமுகவுக்கு அழைக்க நான் விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News