ஸ்டாலின் என்ற பெயரால் நான் அடைந்த சங்கடங்கள் – திமுக தலைவர் பேச்சு !

சமீபத்தில் தான் திமுக பொருளாளர் துரைமுருகன் திமுகவினரே இப்போது தமிழில் பெயர் வைப்பது இல்லை சலசலப்புகளை உருவாக்கியுள்ளதற்கு உதாரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்ட கட்சிக்காரரின் இல்ல திருமணம் ஒன்றில் இதேக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சில் ‘. இனிமேலாவது திமுகவினர் தமிழ்ப் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு வைக்க வேண்டும். அப்படியென்றால் உங்களது பெயர் தமிழ்ப் பெயரா என்று நீங்கள் கேட்கலாம். என் தந்தை கலைஞருக்கு கம்யூனிஸக் கொள்கைகள் மேல் இருந்த பற்றால் எனக்கு இந்தப் பெயரை வைத்தார். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ்ப் பெயரை சூட்டிய அவர் எனக்கும் மட்டும் ஸ்டாலின் எனப் பெயர் வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது எனதுப் பெயரை மாற்ற சொன்னார்கள். ஆனால் என் தந்தை பள்ளியை வேண்டுமானால் மாற்றுகிறேன், பெயரை மாற்றமாட்டேன் என சொல்லிவிட்டார். அதேப்போல நான் ரஷ்யா சென்ற போதும் எனக்கு இது போல சில சங்கடங்கள் ஏற்பட்டன. இந்தப் பெயரால் நான் பல சங்கடங்களை அனுபவித்துள்ளேன். ’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.